அழகுக் குறிப்புகள்
தினமும் பாதாம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?
பொதுவாக பாதாம் பருப்பானது உடலை செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவாகும். பாதாம் பருப்பில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் அதிகமாக உள்ளன.
இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையே தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பாதாம் நமது மூளைக்கு நல்லது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கின்றன.
- குழந்தைகளுக்கு தினமும் காலையில் தண்ணீரில் ஊறவைத்த நான்கு பாதாமை கொடுத்து வந்தால் அறிவாற்றல் அதிகரிக்கும்.
- இதய நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.
- கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
- மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.
- தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
- இரத்த அழுத்தத்தினால் அவதிபடுபவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் படிப்படியாக குறையும்.
You must be logged in to post a comment Login