சினிமா
பணமோசடி வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை! நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன் – நடிகர் சூரி
கடந்த ஆண்டு விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் காவல்துறை இயக்குநருமான (டிஜிபி) ரமேஷ் குடாவ்லா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் நில பேரம் தொடர்பாக நடிகர் சூரியிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நகர காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சூரி பணமோசடி தாக்கல் செய்த மனுவின் பேரில் சைதாப்பேட்டையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், குடாவ்லா மற்றும் ராஜன் ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல்துறையால் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது. இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இவர் விளக்கமளித்துள்ளார்.
அதில், விஷ்ணு விஷால் தந்தை மீதான பண மோசடி வழக்கில் தன் மீது குற்றமில்லை என காவல்துறை விசாரணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,
குற்றத்தை நிரூபிக்க தான் நீதிமன்றமும், காவல்துறையும் உள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது. அவ்வளவு எளிதாக யாரும் எதையும் சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது.
இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன். நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login