அழகுக் குறிப்புகள்
தலைமுடி அடர்த்தியாகவும் , நீளமாகவும் வளர வீட்டிலேயே தயாரிக்கலாம் வெற்றிலை எண்ணெய்
நம் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
முடியை வளர்க்க வேண்டும் என்று ஏதேதோ செய்து பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும்.
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க, ஒரு சூப்பரான வழியை தான் இப்போது நாங்கள் பார்க்கப்போகிறோம்.
வெற்றிலை எண்ணெய்
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 3
சின்ன வெங்காயம் – 4 அல்லது 5 தோலுரித்து சிறிதாக நறுக்கியது,
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீருக்கு மேலே ஒரு சிறிய கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் தேங்காய் எண்ணெயையும், விளக்கெண்ணெயும் ஊற்றி நன்றாக சூடு செய்யுங்கள். அதன் பின்னர் வெற்றிலைகளை சிறு சிறு துண்டுகளாக கிழித்து எண்ணெயில் போட்டு விடுங்கள். பின்னர் சின்ன வெங்காயத்தையும் போட்டு விடுங்கள்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதிக்க கொதிக்க மேலே இருக்கும் எண்ணெய் சூடாகி உள்ளே போட்டிருக்கும் பொருட்களிலிருந்து, எண்ணெயில் சாறு இறங்க வேண்டும். எண்ணெய் பச்சை நிறத்திற்கு வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெயை வெதுவெதுப்பான சூடு இருக்கும் வரை ஆறவிட்டு வடிகட்டி தலையில் பூசி மசாஜ் கொடுக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொடுத்து மசாஜ் செய்து விடுங்கள். இரவு இந்த எண்ணெயை தலையில் வைத்து விட்டு, மறுநாள் காலை தலைக்கு குளித்தாலும் சரி.
தொடர்ச்சியாக இந்த எண்ணெயை பயன்படுத்தி வாருங்கள். உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் மட்டுமல்ல நீளமாகவும் வளரும்.
#Beauty #LifeStyle
You must be logged in to post a comment Login