சினிமா
#Beast : ‘இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமாக இருக்கும்’ – அதிர வைக்கும் ட்ரெய்லர்
தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது ‘பீஸ்ட்’ திரைப்படம்.
படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சான் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் தளபதி தரிசனத்துக்காக மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் சரியாக 6 மணிக்கு வெளியாகியது. சுமார் 3 நிமிடங்கள் இருக்கும் இந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் தளபதி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.
சென்னை சிட்டியின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள மால் ஒன்றில் திடீரென புகுந்த தீவிரவாதிகள் அந்த மாலில் உள்ளவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கின்றனர். அந்த மாலில் வீரராகவன் என்ற ராணுவ வீரரும் இருப்பதால் தீவிரவாதிகளிடம் பொதுமக்கள் மாட்டிக்கொண்டார்களா? அல்லது வீரராகவனிடம் தீவிரவாதிகள் மாட்டிக்கொண்டார்களா என்று நினைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது ட்ரெய்லர்.
படத்தில் அரச முக்கிய அதிகாரியாக செல்வராகவன் நடித்துள்ளார். டிரைலரில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் விஜய்யின் மாஸ் கேரக்டரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
இந்த கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம், இந்த ஹைஜாக்கில் தற்செயலாக நம்ம பையன் ஒருத்தன் உள்ளே இருக்கிறான். பையன்னா சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் ஒரு மிகச் சிறந்த இராணுவ வீரர்களில் ஒருவன் என்ற செல்வராகவனின் வசனங்களும்,
என்ன பயமாக இருக்கிறதா? இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமாக இருக்கும், இந்த அரசியல் விளையாட்டு எல்லாம் நமக்கு செட்டாகாது. நான் அரசியல்வாதியல்ல, ராணுவ வீரன் ஆகிய விஜய் வசனங்களும் மாஸ் ஆக உள்ளன.
ட்ரெய்லர் வெளியாகி சில மணித்தியாலங்களே கடந்துள்ள நிலையில், 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சத்தமாய் படைத்து வருகிறது. தளபதி தரிசனத்துள்ளாக காத்திருந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்ல சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், அனிருத், கீர்த்தி சுரேஷ், சந்தனு பாக்கியராஜ் என பிரபலங்களும் வேற லெவலில் ஸுக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, கலை இயக்குனரின் அற்புதமான மால் செட், மனோஜ் பரமஹம்சாவின் கேமிரா என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பணியும் நெல்சனின் திரைக்கதை மற்றும் இயக்கமும் தளபதி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
#Cinema
You must be logged in to post a comment Login