Connect with us

சினிமா

‘பீஸ்ட்’ updates – திணறும் சமூக வலைத்தளங்கள்

Published

on

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கிறது ‘பீஸ்ட்’.

சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், படத்தின் பாடல்கள் வேற லெவலில் உள்ளன.

அண்மையில் வெளியாகிய அரபிக் குத்து புரமோ மற்றும் பாடல் ஆகியன சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பாடல் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் தற்போது சமூக வலைத்தளங்களை தன்வசமாக்கியுள்ளது ‘பீஸ்ட்’.

நேற்று முன்தினம் படக்குழுவினரால் ‘பீஸ்ட்’ செக்ண்ட் ரக் தொடர்பான புரமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள செக்ண்ட் ரக் இரண்டாவது புரமோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

செக்ண்ட் ரக் முதலாவது புரமோவில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், நெல்சன் என பட்டாளமே தோன்றிய நிலையில், இன்று வெளியாகியுள்ள புரமோவும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை வெளியாகவுள்ளது பீஸ்ட் செக்ண்ட் ரக் ‘ஜாலியோ ஜிம்கானா’ . தளபதி விஜய் குரலில் வெளிவர இருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ ரசிகர்கள் அனைவரையும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தவமிருக்க வைத்துள்ளது.

#Cinema