பொழுதுபோக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்கள்! – இந்தியாவில் போர்க்கொடி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு வலியுறுத்தி பாரதிய ஜனதாக கட்சியின் நகர தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை நான்கு சீஸன்கள் முடிவடைந்த நிலையில்தற்போது 5 ஆவது சீஸன் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இம் மாதம் நடுப்பகுதியளவில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் பா.ஜ.கவினர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டில், பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து கலாசாரத்துக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி எனவும்
நிகழ்ச்சியில் பங்கேற்போரை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கோயில்களை திறக்கவும் விழாக்களை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது. இந்த நிகழ்ச்சி தயாரிப்புக்கு 500 க்கும் மேற்பட்டோர் கூடுகின்றனர்.
எனவே கொரோனா காலத்தில் கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login