சமையல் குறிப்புகள்
விரும்பி உண்ணக்கூடிய சீஸ் பூண்டு ரொட்டி
விரும்பி உண்ணக்கூடிய சீஸ் பூண்டு ரொட்டி
நாம் அடிக்கடி உண்ணும் உணவுகளில் பாண் ஒன்றாகும். ஆனால் அதை உண்டு அலுத்துப் போய்விடும். அதையே சுவை மிகுந்த உணவாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.
அதன்படி சீஸ் பூண்டு ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
பாண் துண்டுகள்– தேவைக்கேற்ப
பூண்டு துண்டுகள்– தேவைக்கேற்ப
வெண்ணெய்– 3 கரண்டி
மிளகாய்– சிறிதளவு
சீஸ்– துண்டுகளாக சிறிதளவு
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் மிளகாய்களை துண்டாக்கி வைத்து நறுக்கிய பூண்டு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றுடன் நன்கு சேரும் வரை கலக்கவும்.
இப்போது பாண் துண்டை எடுத்து அதில் சீஸ் தடவவும் ஒரு சாண்ட்விச் தயாரிப்பது போன்று அதன் மீது மற்றொரு துண்டுகளை சீஸ்ஸூடன் வைத்து அதன் பின் வெண்ணெய் மற்றும் மிளகாள் பூண்டு பேஸ்ட்டுடன் இருபுறமும் பிரட்டி எடுக்கவும்.
பின் மிதமான வெப்பத்தில் சட்டியில் சாண்ட்விச் பாண் துண்டுகளை வைக்கவும் பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கி மறுபுறமும் அவ்வாறு வரும் வரை சூடாக்கவும்.
பின் இறக்கி விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.
You must be logged in to post a comment Login