பொழுதுபோக்கு
தமன்னாவுடன் ஜோடி சேரும் ஜெனிலியா கணவர்
தமன்னாவுடன் ஜோடி சேரும் ஜெனிலியா கணவர்
பிரபல நடிகை தமன்னா நடிக்கும் வெப் தொடரில் பிரபல நடிகை ஜெனிலியாவின் கணவர் இணைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர் தமன்னா. இவர் இப்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடித்த வெப்தொடரான ’நவம்பர் ஸ்டோரி’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமன்னா நடிக்கும் அடுத்த வெப்தொடர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் இந்த வெப்தொடருக்கு ’பிளான் ஏ பிளான் பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வெப்தொடரில், பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் இணைந்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
You must be logged in to post a comment Login