26 69843592e5530 1
பொழுதுபோக்குசினிமா

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் D55: மம்மூட்டியுடன் இணையும் பிரம்மாண்டமான தொடக்கம்!

Share

அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்முறையாக இணையும் ‘D55’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கைகோர்த்துள்ளனர். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷ் – மம்மூட்டி முதன்முறையாகத் திரையில் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகிய இரு முன்னணி நடிகைகளும் ஒப்பந்தமாகியுள்ளனர். கண்மணி அன்போடு பாடல் மூலம் பிரபலமான இளம் இசை சென்சேஷன் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்தப் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதாலும், தனுஷின் மாறுபட்ட நடிப்பு மற்றும் மம்மூட்டியின் கூட்டணி என்பதாலும் ‘D55’ தற்போதே கோலிவுட்டின் “Most Anticipated” படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...