அரசியல் – tamilnaadi.com

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்உழைப்பாளர் தின நிகழ்வுகள்!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்உழைப்பாளர் தின நிகழ்வுகள்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நேற்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நா.பார்த்திபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#srilankaNews

மேல் மாகாணத்தில் ஊரடங்கு!
மேல் மாகாணத்தில் உடடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

#SriLankaNews

சர்வபலம் படைத்த ஜனாதிபதியையே புறமுதுகு காட்டி ஓட வைத்த மக்கள் எழுச்சி!
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் சக்தி இன்று பேரெழுச்சி கொண்டது. அதுமட்டுமல்ல பொலிஸார், படையினர்கூட மக்கள் சார்பு போக்கையே கடைபிடித்தனர். இதனால் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசமைக்க பதவி விலகும் அறிவிப்பை பிரதமர் விடுத்திருந்தாலும், ஜனாதிபதியிடமிருந்து இன்னமும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் நிலையிலேயே அவர் உள்ளார். அவ்வாறு நடந்தால் இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி விலகி செல்லும் முதல் நிறைவேற்று ஜனாதிபதி என்ற அரசியல் துரதிஷ்ட சாதனை அவரை சாரும்.

கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நேற்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதலாவதாக ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தேசிய கொடிகளை தாங்கியவாறு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பறினர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர். எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்று இலக்கை அடைந்தனர்.

இதன்போது சுமார் 42 பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.

ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்கள், அனைத்து அறைகளுக்குள் சென்றனர். நீச்சல் தடாகத்தில் நீராடி மகிழ்ந்தனர். சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த உணவு பொருட்களை உட்கொண்டனர்.

அத்துடன், பிரதம அமைச்சரின் வாசஸ்தலமான அலரிமாளிகையும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது மாளிகைகளில் இருக்கவில்லை. அவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நாட்டின் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கும், அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுப்பதற்காகவும் சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

சில கட்சி தலைவர்கள் நேரிலும், மேலும் சிலர் காணொளி ஊடாகவும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டி, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும்வரை பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் செயற்படுவார்.

ஒரு வார காலத்துக்குள் இடைக்கால சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலுக்கான கால எல்லையும் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி இடைக்கால அரசமைய, பிரதமர் பதவியில் இருந்து விலக தான் தயார் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வாறு தெற்கு அரசியல் களம் பெரும் கொந்தளிப்பாகவே காணப்படுகின்றது. அடுத்து வரும் மணிநேரங்களில் தரமான சிறப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன.

#SriLankaNews

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்! – ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் பிரதமர்
” நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.

என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமரின் முழுமையான உரை வருமாறு,

நான் பிரதமர் பதவியை கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 இற்கு ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன.

2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்கள். எனினும், கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும். வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் .

அதேப்போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாயாகும் . நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம். அதன்படி அண்ணளவான மிகுதி 1250 மில்லியன் ரூபாய்கள். நாம் நேற்று அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3000 பில்லியனில் இருந்து 4000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.

2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன. ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.

இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது.

இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றில் இருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்.

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம் .

அதேப் போன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும்.

மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இவ்வனைத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று ஒரு டீசல் ஏற்றிய கப்பலை நேற்று கொண்டு வந்தோம். அதனால் இன்று முதல் அந்த டீசலை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்பொருட்டு இந்தியாவின் ஒத்துழைப்பு நமக்கு கிடைத்தது. அதேப் போன்று வந்துள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சனைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு இடையில் , மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாகும். அதேப் போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும். ஆனால் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்திற்க்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.

இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.

அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன் .

2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளது .

2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது. நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நட்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க ப் போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.

அரசாங்கம் தற்போது 92 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 84.38 , 95 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 71.19 , டீசல் லீட்டர் ஒன்றில்ரூ. 131.55 சுப்பன் டீசல் லீட்டர் ஒன்றில் ரூ. 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றில் ரூ. 294.50 என நட்டமடைகின்றது .

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்த நட்டத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதேப்போல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம் ரூ. 17 ஐ அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபாய்கள் வரை செலவு செய்கிறது . அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபாய்கள் நட்டம் ஏற்படுகிறது. அதுவும் மோசமான சிக்கலாகும்.

நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது. எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது. எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.

நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே.

எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதிர்கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளித்தமை குறித்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்திற்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான குறுகிய கால- மத்தியக் கால – மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல எம்மால் முடியும். மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு , விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு , இளைஞர் யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு , மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் கலற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.

நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.

#SriLankaNews

யார் இந்த ரணில்?? அரசியலில் கடந்துவந்த பாதை (1970 -2022)
ரணில் அரசியலில் கடந்துவந்த பாதை 1970 -2022!

பிறப்பு – 1949 மார்ச் 24.

தந்தை – எஸ்மண்ட் விக்கிரமசிங்க.

தாய் – மாலினி விக்கிரமசிங்க.

மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்.

ஆரம்பக்கல்வி – கொழும்பு ரோயல் கல்லூரி.

உயர்கல்வி – கொழும்பு பல்கலைக்கழகம், சட்டத்துறை.

ஐ.தே.கவின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியல் பயணம் ஆரம்பம். 1970 இல் களனி தொகுதி அமைப்பாளராக நியமனம். அதன்பின்னர் பியகம தொகுதி கையளிப்பு.

1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டி. 22 ,045 வாக்குகளைப்பெற்று வெற்றிநடை.

28 ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமனம்.

1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ஒப்படைப்பு.

1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிப்பு. 9 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த அவர்,

கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.

1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பு.

1994 இல் ஐ.தே.க. தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமனம். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் ரணில் செயற்பட்டார்.

1995 – திருமண வாழ்வில் இணைவு. களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியையான மைத்திரி விக்கிரமசிங்கவை கரம்பிடித்தார்.

1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டி. சந்திரிகாவே வெற்றிபெற்றார். ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன.

2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி. ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.

நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.

2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.

2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின்கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது. தேர்தலில் தோல்வி. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றிபெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது.

2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது.

2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சிமூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார்.

எனினும், நீதிமன்றத்தைநாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

எனினும், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் வாய்ப்பு உதயமானது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.

2020 பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனியாக போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடு முழுவதும் 2.15% வாக்குகளே கிடைக்கப்பெற்றன.

தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு கிடைத்தது.

நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 45 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். 2020 இல் தோல்வியை தழுவினார். எனினும், தேசியப்பட்டில் ஊடாக சபைக்கு நாடாளுமன்றம் வந்தார்.

அரசியலில் குள்ளநரியாகவே அவர் பார்க்கப்படுகின்றார். 42 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப்பிடித்ததுடன், அரசமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவேதான் தற்போது ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகியுள்ளார்.

#SriLanka #Artical

புதிய அமைச்சரவை பட்டியல் நாளை! – நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார்
புதிய அமைச்சரவை பட்டியல் நாளை இறுதிப்படுத்தப்படும்

ரணிலுக்கு நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார் நிலையில்

‘ராஜபக்சக்களின்’காவலன் என ஜே.வி.பி. சீற்றம்

பிரதமர் விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம்

17 இல் ஜனாதிபதிக்கு பலப்பரீட்சை

கோ ஹோம் ரணில் கோஷமும் ஆரம்பம்

பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.

அமைச்சுகளுக்கான விடயதானங்கள், அமைச்சுகளின்கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் குறித்த ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்று (12) நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறக்கூடும். நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகள் அலி சப்ரியிடமே கையளிக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு முடிவடைந்த பின்னர், நிதி அமைச்சு பதவியில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், வன்முறைகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச துறந்தார்.

இதனையடுத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்படும் என சஜித் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ என்பதில் தேசிய மக்கள் சக்தியும் உறுதியாக நின்றது. இதனையடுத்தே பிரதமர் பதவிக்கு, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். இந்நிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதிக்கு அறிவித்தார்.

எனினும், அந்த கோரிக்கை ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தவகையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை, ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமரின் இந்த நியமனத்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்த்துள்ளது. இது மக்களின் ஆணைக்கு புறம்பான செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. “

ராஜபக்சக்களின் காவலனே ரணில்” என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

அத்துடன், பிரதமராக ரணிலையும், அவரின் பங்களிப்புடன் அமையும் ஆட்சியையும் ஏற்கவில்லை என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், ஓமல்பே சோபித தேரரும் அறிவித்துள்ளனர். ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்களை, மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டதை எதிர்ப்பவர்கள், கோ ஹோம் ரணில் என கோஷம் எழுப்பவும் ஆரம்பித்துள்ளனர். ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என கூறப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதை அவர் இன்று மாலை அறிவித்தார்.

அரச பங்காளிக்கட்சிகளாக செயற்படும் இ.தொ.கா., ஈபிடிபி உள்ளிட்ட கட்சிகள் ரணிலுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.

இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா செல்லக்கூடும். பிரதமரை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை இந்திய தூதுவர் விடுப்பார் என தெரியவருகின்றது.

நாடாளுமன்றம் 17 ஆம் திகதி கூடுகிறது அதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அதனை விவாதித்து, வாக்கெடுப்புக்கு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லாமல், ஜனாதிபதியின் நடவடிக்கைமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையாகவே அமையவுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவது குறித்தும் யோசனையொன்று நிறைவேற்றப்பட வேண்டும், அது நிறைவேறினால் மாத்திரமே விவாதம் – வாக்கெடுப்பு இடம்பெறும்.

பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்துள்ளதால், எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதி சபாநாயகர் தேர்வும் இடம்பெறவுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

ஆர்.சனத்

ஆட்சி மாற்றம் விரைவில்! – தெற்கு அரசியலில் நடப்பது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று தெரிவித்தார்.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் அரசுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஜீவன் தொண்டமானும், மருதபாண்டி ராமேஸ்வரனும் சபைக்கு தெரிவாகினர். நாடாளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகியுள்ள தமிழ் உறுப்பினர்களில் , . ஒரு லட்சத்துக்கும் மேல் விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ் அரசியல்வாதியாக ஜீவன் தொண்டமான் திகழ்கின்றார்.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை ஏப்ரல் 5 ஆம் திகதி இ.தொ.கா. மீளப்பெற்றுக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்பட துணிந்தது.

இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அக்கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘நடுநிலை’ என்ற அறிவிப்பு வெளியானதால், கடும் எதிர்ப்புகள் வலுத்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் பக்கம் நின்று, இந்த முடிவை கட்சி எடுத்துள்ளதுஎன ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

1948 முதல் 1977வரை இலங்கையில் பிரதமர் ஆட்சி முறைமை இருந்தது. 1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி முறை அமுலானது. அன்று முதல் இன்றுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்களுடன் காங்கிரஸ் இணைந்து செயற்பட்டுள்ளது.

ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி. பி விஜேதுங்க, சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச , கோட்டாபய ராஜபக்ச ஆகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் தலைமையிலான அரசுகளிலும், அமைச்சரவைகளிலும் இ.தொ.கா. பதவிகளை வகித்துள்ளது. மைத்திரிபால சிறிசேன காலத்தில் முத்து சிவலிங்கத்துக்கு இராஜாங்க அமைச்சு பதவி கையளிக்கப்பட்டது.

1989 பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டது.

இ.தொ.காவின் வேட்பாளர்களான முத்து சிவலிங்கம், வீ. அண்ணாமலை ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். எனினும், ஐ.தே.க. ஆட்சியில் இ.தொ.காவுக்கு இரண்டு தேசியப்பட்டியல்கள் வழங்கப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமானும், பிபி தேவராஜும் நாடாளுமன்றம் சென்றனர். அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.

1994 , 2000, 2001, 2004, 2010 , 2015 மற்றும் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்களை இ.தொ.கா. பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே எதிர்கொண்டுள்ளது. 1977 இல் மட்டுமே கட்சி சின்னமான சேவலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை அக்கட்சி பெற்றது. (சௌமியமூர்த்தி தொண்டமான் வெற்றிபெற்றார்)

தேர்தல் காலங்களில் ‘அரசியல் கூட்டணி’களுக்காக கட்சி மாறுதல் அல்லது தேர்தலின் பின்னர் அமைச்சு பதவிகளுக்காக ஆளுங் கட்சியில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை ‘சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப’ காங்கிரஸ் எடுத்துள்ளது. எனினும், அரசொன்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை – ‘இக்கட்டான காலகட்டத்தில் ‘ ஆதரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே கருதப்படுகின்றது.

52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பு சூழ்சியின்போது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை இ.தொ.கா. எதிர்த்தது. ‘சூழ்ச்சி ஆட்சி’யின் அமைச்சரவையில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் இடம்பிடித்திருந்தார்.

இ.தொ.கா., தமது அரசுக்கு ஆதரவு வழங்கும் என்றே ஜனாதிபதி நம்பினார். அமைச்சு பதவி வழங்கப்படும் எனக் கூறி பஸிலும் பேச்சுகளில் ஈடுபட்டார். எனினும், மக்கள் பக்கம் நின்று இ.தொ.கா. முடிவெடுத்துள்ளது.

‘தற்போதைய சூழ்நிலை’ ஜனாதிபதி, பொதுத்தேர்தலுக்கான காலப்பகுதி அல்லாமல்,

அதேபோல – பிரதான எதிர்க்கட்சியுடன் மாற்று கட்சி (தமிழ் முற்போக்கு கூட்டணி) பலமான அரசியல் உறவை கொண்டுள்ள நிலையில்,

‘அரசியலுக்கு அப்பால்’ மக்கள் பக்கம் நின்று, பதவிகளையும் மறுத்து, இ.தொ.கா. அரசை எதிர்க்க துணிந்துள்ளமை அக்கட்சியின் அரசியல் வரலாற்றில் ஒரு திரும்புமுனையாக பார்க்கப்படுகின்றது.

தொழிலாளர் தேசிய சங்கம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறி, 1965 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்n’தொழிற் சங்க துறவி’ அமரர். வி.கே. வெள்ளையன். அவருடன் பலர் இணைந்தனர்.

குறிப்பாக ‘வீடற்றவன் நாவல்’ தந்த சி.வி. வேலுபிள்ளையின் வருகையானது தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெற்றி பயணத்துக்கு வலுசேர்த்தது. சி.வி. வேலுபிள்ளை 1947 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கை – இந்திய காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு சபைக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 65, 70 களில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டாலும் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.

2010 இல் நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து களமிறங்கிய திகாம்பரம் வெற்றிபெற்றார்.

2015 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் திகாவும், திலகரும் சபைக்கு சென்றனர். 2018 இல் 52 நாட்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தனர்.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று திகாவும், உதயகுமாரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் சபைக்கு தெரிவாகினர். ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடவுள்ளனர்.

அதேவேளை, தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத்தில் 48 தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தமிழ், முஸ்லிம்) அங்கம் வகிக்கின்றனர்.

ஆளுங்கட்சி, எதிரணி மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு தெரிவான மேற்படி 48 எம்.பிக்களில் 36 பேர் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். 12 பேர் எதிர்த்து வாக்களிப்பார்கள். ( எம்.பிக்கள் விவரங்களை ஏப்ரல் 20 ஆம் திகதி எனது பதிவிடப்பட்ட எனது முகநூல் பதிவு ஊடாக முழுமையாக அறியலாம்.)

அதேவேளை, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், புதிய பிரதமர் பற்றிய விவரம் வெளிவரவில்லை. இடைக்கால அரசிலும் தானே பிரதமர் என மஹிந்த அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக்கட்சி உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பரிந்துரைக்கமைய , புதிய பிரதமரை நியமித்து, இடைக்கால சர்வக்கட்சி அரசமைக்க ஜனாதிபதி முன்வந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்படும்.

பிரதமர் மஹிந்த பதவி விலக மறுத்து, இடைக்கால அரசு அமைக்க முயற்சி எடுக்கப்படும் பட்சத்தில், அதனை ஏற்பதற்கு சுயாதீன அணிகள் உடன்படமாட்டா!

தற்போதைய அரசியல் கள நிலைவரப்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதில் அரசு தோல்வி அடைவதற்கான வாய்ப்பே அதிகம். 120 பேர், புதிய பிரதமர் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இது தொடர்பான எண் விவரத்தை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று வெளியிட்டார்.

கம்மன்பிலனின் கூற்றின் பிரகாரம், எதிரணிகளின் சார்பில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீன அணியில் 39 பேர், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள மூன்று முஸ்லிம் எம்.பிக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா , சரித ஹேரத் ஆகியோர், அரசுக்கான எதிரான நகர்வுக்கு ஆதரவளிக்கக்கூடும்.

பிரதம மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி ஒருவாரகாலம் கெடு விதித்துள்ளது. அந்தவகையில் அடுத்துவரும் சில நாட்கள் இலங்கை அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews #Artical

நாட்டில் விரைவில் பஞ்சம்!! – முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கானஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த மாதம் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தனியார் வங்கியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசு உடனடியாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் வீதியில் இறங்கிய போதிலும் நாடாளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SrilankaNews

மக்களின் தன்னெழுச்சி போராட்டமும் – ‘அரசியல் – அரச கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும்
மக்களின் தன்னெழுச்சி போராட்டமும் – ‘அரசியல் – அரச கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக காலி முகத்திடலிலும், ஜனாதிபதி செயலக வளாகத்திலும் இடம்பெறும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

மக்கள் தாமாக முன்வந்து இவ்வாறு மேற்கொள்ளும் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு, நாளுக்கு நாள் பேராதரவுகள் பெருகிவிடுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர்.

இந்நிலையில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கின்றதா, ‘கோ ஹோம் கோட்டா’ என்பதுதானே பிரதான கோரிக்கை, அதுதான் – ஜனாதிபதி பதவி விலக மறுத்துவிட்டாரே! அப்படியென்றால் போராட்டம் தோல்விதானே என ஒரு சிலர் கருதுகின்றனர்.

ஆளுங்கட்சி வசம் ‘113’ இருக்கின்றது, பிரதமரும் பதவி விலகவில்லை, அப்படியானால் போராட்டம்மூலம் கிடைத்த பெறுபேறுதான் என்னவென்று மேலும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

மேற்படி கேள்விகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான் – அவ்வாறான கேள்விகளை தொடுப்பவர்களின் ஆதங்கமும் நியாயமாகவே இருக்கின்றது.

ஆனால் மக்களின் போராட்டங்கள் அரசியல் மற்றும் அரச கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள சாதகமான சில மாற்றங்களையும் நாம் வெற்றியாகவே பார்க்க வேண்டும்.

சில மேற்குலக நாடுகளில், ரயில் விபத்து இடம்பெற்றால்கூட போக்குவரத்து அமைச்சர் பதவி விலகும் கௌரவமான அரசியல் கலாச்சாரம் இருக்கின்றது. மேலும் சில ஜனநாயக நாடுகளில், மக்கள் எதிர்ப்பை வெளியிட்டால், உயர் பதவிகளை வகிப்பவர்கள், கௌரவமாக வெளியேறும் நடைமுறையும் இருக்கின்றது.

ஆனால் எமது நாட்டில் இன்னும் அவ்வாறானதொரு அரசியல் கலாசாரம் உருவாகவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். பதவியில் இருப்பவர்கள், தலையே போனாலும் பரவாயில்லை, அதனை தக்க வைத்துக்கொள்வவே பாடுபடும் நிலைமையே நீடிக்கின்றது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் சர்வ அதிகாரத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், அதனை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டு – விடைபெறுவாரா என்ன? – அப்படியானால் தீர்வுதான் என்ன என்ற வினா எழக்கூடும்.

மக்களின் இந்த போராட்டம், அரசியலமைப்புக்குட்பட்டதோர் தீர்வு பொறிமுறையையே எதிர்பார்க்கின்றது. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் இல்லை. கிளர்ச்சிகளில் ஈடுபடவும் இல்லை. வன்முறையை அரசியலை ஒருபோதும் அவர்கள் ஆதரிக்கவில்லை – ஆசிர்வதிக்கவும் இல்லை. சட்டப்படியான தீர்வு திட்டத்தையே வலியுறுத்துகின்றனர்.

– அப்படியானால் –

அரசமைப்புக்கு உட்பட்ட தீர்வு பொறிமுறை எனில், ஒன்று, ஜனாதிபதி பதவி விலக வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் குற்றப் பிரேரணைமூலம் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.

முதலாவது தேர்வு இன்னும் கைக்கூடவில்லை. மக்கள் போராட்டம் வலுவடைந்தால், முதல் தேர்வைக்கூட ஜனாதிபதி நாடலாம்.

இரண்டாவது, குற்றப் பிரேரணை. அதற்கான நகர்வு இடம்பெறுகின்றது. ஆனால் அதனை நிறைவேற்றிக்கொள்வதென்பது பெரும் பாடு என்பதே உண்மை. தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு.

எனினும், அரசமைப்பின் ’20’ ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு ஆளுந்தரப்பே தற்போது முன்வந்துள்ளது. அதற்காக 21 ஆவது திருத்தச்சட்டம் தயார் நிலையில் உள்ளது. இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

மறுபுறத்தில் எதிரணிகளின் சார்பிலும் இதுவரை ’21’ தொடர்பில் இரு தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், பதுக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டுவருவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோஷம் சட்டம் இயற்றும் சபையில் மேலோங்கியுள்ளது. சில அரசியல் வாதிகள் தமது சொத்துகள் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதுவும் தன்னெழுச்சி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

தவறான சில அரசியல் முடிவுகளை எடுத்தவர்கள்கூட, மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அரசியல் கலாசாரமும் மலர்ந்துள்ளது. இது மக்கள் போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றம் இல்லையா?

கட்சி தாவும் எம்.பிக்களை மக்கள் நிராகரிக்கின்றனர். விலைபோன அவர்களும் மக்கள் முன்வர அஞ்சுகின்றனர். தாம் எடுத்த முடிவு தவறு என தெரிந்தும், அரசியல் பிழைப்புக்காக அதனை செய்துவிட்டு, தலைமறைவு வாழ்வு வாழ்வது, மக்கள் எழுச்சியால் உருவான மாற்றம் இல்லையா?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே, இரசாயன உரம் தொடர்பில் தான் எடுத்த முடிவு தவறு என்பதை ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகவில்லையா?

அமைச்சர்கள் கூண்டோடு பதவி துறந்தனர். ஜனாதிபதி, பிரதமரைதவிர ராஜபக்சக்கள் பதவிகளை பெற முன்வரவும் இல்லை. அமைச்சரவை எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

வாக்குரிமை’ என்பது மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் என்பதை இந்த போராட்டம் உணர்த்தவில்லையா? அதனை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் நிலையை மக்கள் தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர்.

பல இடங்களில் இருந்து போராட்டங்களுக்கு வருபவர்கள், தேர்தல் தினத்தில் என்ன நடந்தாலும், இனி வாக்களிக்க ஊருக்கு சென்றுவிட வேண்டும் எண்ணத்தை தம்முள் விதைத்துள்ளனர். இதுவும் போராட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என குறிப்பிடலாம்.

இனவாதம், மதவாத, கட்சி, சலுகை அரசியலுக்கு அப்பால் ‘கொள்கை’ அரசியல் என்ற பொதுவான கருத்தாடல் உருவாகியுள்ளது. இதுவும் சாதகமான மாற்றமாகும்.

ஏனையோரின் பிரச்சினைகளை செவிமடுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் – நிலையும் உருவாகியுள்ளது.

அரசுக்கு ஆலவட்டம் பிடித்த சில தனியார் ஊடகங்கள்கூட , மக்கள் எழுச்சியால் மக்கள் சார்ந்த செய்திகளை ஒளிபரப்புகின்றன. இதுவும் போராட்டத்தால் ஏற்பட்ட ஓர் மாற்றம் எனலாம். இப்படி பல விடயங்களை பட்டியலிடலாம்.

அடுத்து என்ன?

ஜனாதிபதி பதவி விலகவில்லை, இந்த அரசும் தொடர்கின்றது, போராட்டங்களும் தொடர்கின்றன. அப்படியானால் அடுத்து என்ன நடக்கும்?

தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும். உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. சர்வதேச நிறுவனங்கள் கைவிரிக்கும். வெளிநாட்டு முதலீடுகள் வராது. நாடு வங்குரோத்து நிலையின் உச்சகட்டத்தை அடையும். வரிசைகள் தொடரும். விலைகள் உயரும். சிலவேளை, மக்களின் போராட்ட வடிவமும் மாறக்கூடும். தனியார் துறைகள் ஸ்தம்பிக்கும். பலர் தொழில் வாய்ப்பை இழக்க நேரிடும்.

எனவே, உடனடி தீர்வு பொறிமுறையை தேட வேண்டும்.

உங்கள் தொகுதிகளில் உள்ள எம்.பிக்களுடன் பேச்சு நடத்துங்கள். ஜனாதிபதியை விரட்ட உடன்பட வில்லையெனில் இடைக்கால அரசை ஆதரிக்கும் யோசனையை முன்வையுங்கள். அதற்கு உடன்படாவிட்டால் இனி வாக்களிக்கமாட்டோம் என்பதை உறுதியாக அறிவியுங்கள்.

புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால சர்வக்கட்சி அரசு அமையட்டும். மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்று சபை ஒன்று அமையட்டும். அதில் நிபுணர்கள் அங்கம் வகிக்கட்டும். அந்த சபையுடன் பேச்சு நடத்தி – ஆலோசித்து அமைச்சரவை முடிவுகளை எடுக்கும்.

இந்த இடைக்கால அரசின்கீழ் 20 ஐ நீக்கிவிட்டு, உடன் 19 ஐ கொண்டுவருவதற்கான அரசமைப்பு திருத்தத்தை உடன் மேற்கொள்ளலாம்.

நாடு ஓரளவு ஸ்தீரமடைந்ததும் தேர்தலுக்கு செல்லாம்.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ஸ்தீரத்தன்மையொன்று ஏற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பாதிக்கப்படபோவது சாதாரண மக்களே. அரசியல்வாதிகளுக்கு பண பலம் இருக்கலாம். எனவே, நாடு – நாட்டு மக்கள் குறித்து சிந்தித்து போராட்டக்காரர்களுட் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய நேரம் இது.

#SriLanka #Artical

14 முஸ்லிம் எம்.பிக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதற்கு மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பைஸால் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரஹுமான் ஆகிய மூவருமே மொட்டு அரசுடனான ‘அரசியல் உறவை’ இன்று முதல் இவ்வாறு முறித்துக்கொண்டுள்ளனர்.

எம்.எஸ்.தௌபீக், 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி , ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தொலைபேசி சின்னத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கிய மு.கா. உறுப்பினரான பைஸால் காசிமும், மக்கள் ஆணையை பெற்று சபைக்கு தெரிவானார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, இஷாக் ரஹுமான், ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிநடைபோட்டார்.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் 7 நாடாளுமன்ற உறுப்பினர் , அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அரசுக்கு நேசக்கரம் நீட்டினர்.

இவர்களில் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. எஸ். எம். எம். முஸ்ஸாரப்புக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகளின் கூட்டு முயற்சியால் முஸ்லிம் தேசிய கூட்டணியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு சபைக்கு தெரிவான அலி சப்ரிக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிரணி, மற்றும் தேசியப்பட்டியல் நியமனம் என மொத்தம் 20 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் எம்.பிக்களான கபீர் ஹாசீம், அப்துல் அலீம், முஜிபுர் ரஹுமான், எஸ்.எம். மரிக்கார், இம்ரான் மஹ்ரூப் மற்றும் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோரும் பிரேரணைக்கு ஆதரவை தெரிவித்து கையொப்பம் இட்டுள்ளனர்.

அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள முஸ்லிம் மூவரும், அவர்கள் சார்ந்த கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவார்கள் என தெரியவருகின்றது. ( 20 ஐ ஆதரித்ததால் கட்சியில் இருந்து அவர்கள் இடைநிறுத்தப்பட்டாலும், அடிப்படை உறுப்புரிமை இன்னும் நீக்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படும் எச்.எம்.எம். ஹரீசும், மக்கள் பக்கம் நின்று பிரேரணையை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மொஹமட் முஸம்மிலும், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவும் 11 கட்சிகள் எடுக்கும் தீர்மானத்துக்கமையவே செயற்படுவார்கள் என நம்பப்படுகின்றது.

அதேவேளை, நிதி அமைச்சர் அலி சப்ரி, சுற்றுச்சுழல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் , இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், முஷாரப், அலிசப்ரி மற்றும் ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோர், நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பார்கள்.

ஆர்.சனத்

#SriLankaNews