கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தருமபுரம் கல்மடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது....
இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும் தன்மை அதிகரிக்கலாம் என...
கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது....
சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை...
இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை...
அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக...
இன்றைய செய்திகள் – (06-10-2021)
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 3 பேரை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் சர்வதேச மட்டத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று 3 பேரை தலிபான்கள் பொது வெளியில் பட்டப் பகலில் கிரைன் மூலமாக...
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வின் தலைவராக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தென்கொரியாவில் இடம்பெற்றுவரும் மாநாட்டில் 47...
யாழ். வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில் இளம் யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வரும் ஜெகதீஸ்வரன் டினுசியா என்ற (வயது-19) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட...
யாழ்.கீரிமலை கடலில் மூழ்கி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். நண்பர்களுடன் கீரிமலை கடலில் இன்று நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்...
நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும்...
உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக வீதியை மறித்து, போராடிக் கொண்டிருந்தபோது அவ்...
நாட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, முன்னணி சுகாதார சேவை குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது தடுப்பூசி வழங்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
நிரூபமா ராஜபக்ஷவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கும், தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு...
ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் 13 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்கள். அங்கு தங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி வரும் குழுக்களை கொலைசெய்தும் வருகிறாரார்கள்.அதனால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது. ஹைதர் மாவட்டத்தில் தமக்கு எதிராக உருவாகியுள்ள குழுக்கள் மீது...
உத்தர பிரதேசம் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி கிராமத்தில் விவசாயிகளின் போராட்டம் இடம்பெற்ற போது, பா.ஜ.க தொண்டர்கள் காரினால் மோதி, சிலர்...
வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச மறுத்துள்ளார். அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், ஆனால் மக்களின் நலனுக்காக சமூகத் திட்டங்களில்...
இந்தியா சீரடி சாய்பாபா கோவிலில் நாளை முதல் பக்தர்கள் வழிபாடாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக பக்தர்களுக்கு தடைவிதித்த பிரபல ஆலயங்களில், தற்போது வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன். பக்தர்களுக்கும் அனுமதி...
‘பெண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையூட்டல் ஆணைக்குழுவுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட...