மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டடது மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பலவந்தமாக நாட்டுக்கு கொண்டுவர முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். அவரை இங்கு கொண்டுவருவது சம்பந்தமாக சிங்கப்பூரின் சட்டமா அதிபருடன் பேச்சுகள்...
கேரளத்தில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை 35 பேர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில்...
அமெரிக்காவின் எச்சரிக்கை கண்டுகொள்ளாத வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனை முன்னெடுத்துள்ளதை அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. பாலிஸ்டிக் வகை ஏவுகணையை வடகொரியா சோதனை மேற்கொண்டதாகவே தெரியவந்துள்ளது....
பசுவதை தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றில் விவசாயத்துறை அமைச்சரும், மாகாணசபை அமைச்சரும் சமர்ப்பித்த பிரேரணைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களால் முன் வைக்கப்பட்ட திட்டம் பின்வருமாறு…………
மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியிலிருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் முள்ளிச்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நேசராசா (வயது 56) என்பவர் எனத்...
நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் வயோதிபர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5...
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில், இறுதி சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
இறக்குமதியாளர்களால் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை முன்னணி சீனி இறக்குமதியாளர்களால் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனி ஒரு கிலோவின் விலை 220 தொடக்கம் 245...
கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் ராஜபக்ச வியூகம் வகுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் நிலையில், மீண்டும், அரிசி மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி, வெள்ளைச்சீனி 122 ரூபா முதல் 135 வரை விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், சிவப்பு...
ஈரான் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் இடைநிறுத்தப்பட்ட அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி கலந்து கொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியான் அறிவித்துள்ளார். ஈரான்...
இந்திய,தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை இட்டு வருகிறார்கள் . மேலும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன...
இன்று T 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை மற்றும் நமீபியா மோதின. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது....
கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு...
விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவாகுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர்...
ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டுமென மலாலா தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்குக்...
வவுனியா ஏ9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியூடாக பயணித்த கார், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு அலுவலகத்திற்கு எதிராகவுள்ள வீதிக்கு திரும்ப முற்பட்ட...
கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக் காரணமாக முட்டை விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
இந்தியாவின் குஷி நகரிலுள்ள விமான நிலையமானது, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் இருந்தே முதல்...