குஜராத் மாநிலத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்துள்ளனர். இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது....
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த 14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும்...
பல்கலைக்கழக விவசாயபீடங்களின் பேராசிரியர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்கும் முகமாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கக்கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், 141...
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) இன்றையதினம் அழைக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரில் தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை மேற்கொள்வதற்கு நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐவக்கும் சீருடை வடிவமைத்து...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின்...
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற இடம்பெறுகின்றன. கைபர் பக்துங்வா...
20-20 உலக கிண்ண தொடரில் அவுஸ்ரேலியாவை இன்று இலங்கை எதிர்கொள்கிறது. டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இலங்கை...
” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,...
தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தால் நிராகரிக்கப்பட்ட உரமாதிரிகளை, மூன்றாம் தரப்புக்கு வழங்கி ஆய்வுக்குட்படுத்தும் அரசின் முடிவுக்கு பங்காளிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சீன நிறுவனமொன்றிடமிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு...
கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது. அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும், மொட்டு சின்னம் இல்லாவிட்டால்...
கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாகவே அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை...
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை, நாளை மறுதினம்...
உரம் அடங்கிய கப்பலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என விசாரணை முடிவுகள் தெளிவாக நிரூபித்திருந்தாலும், அதனை எவ்வாறு இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க...
சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை...
நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் எனும் செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் – இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இவ்...
நாட்டில் மேலும் ஐந்து புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி மறுத்துள்ளது. கோவக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கக் கோரி, அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம்...
பௌத்த மதத்திற்கு எதிரானவன் நான் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. இதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு...
ஆப்கானிஸ்தானுக்கு உதவுங்கள் – சீனா, பாகிஸ்தான் கூட்டுக் கோரிக்கை சீன அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சீன அதபர் ஜின்பிங்குடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு...