கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் உரிரிழந்த 19வயதான இளைஞர் இரத்தினபுரி – நிவித்திகல...
இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்சவுக்கு உரிமை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே...
பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஏற்பட்ட கொரொனா பாதிப்பால் பல்கலைகழக செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது ஓரளவு நாடு...
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இதுவரை இடம்பெற்றுவந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுடன் தொடர்புடைய...
நாட்டில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தக்காளி, கறி மிளகாய், போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மாதம் பண்டிகை காலம் என்பதால்...
கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில்...
ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஏமன்-சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடாத்தியுள்ளது. ஏமன் – சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின்...
மன்னார் – சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மப் பொதியொன்றால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இன்று (20) காலை செளத்பார் முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மப் பொதியொன்று...
‘கார்த்திகை வாசம் மலர் முற்றம்’ யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று(20)முதல் எதிர்வரும்...
50 கோடி டொலர்களை இந்தியாவிடமிருந்து கடனாக பெறும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் , எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் அவற்றை சரிசெய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்...
சிறப்பானதொரு பாதீட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....
எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர்,...
இன்று காலை கொழும்பில் கட்டடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த...
ஜோ பைடனின் அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் சென்றுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாகும் நிலையில், அவரது அதிகாரங்கள் தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா தேவி ஹரிஸிடம்...
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும்...
சமையல் எரிவாயு கிடைப்பதில் இனி வரும் காலங்களில் எவ்வித தட்டுபாடும் இல்லையென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடும்போது, சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5...
நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
2022 பட்ஜெட்டில் சாதாரண மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே வறுமை, ஏழ்மை என்னவென்பது அதிகமாக தெரியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் மீதான நேற்றைய (19) விவாதத்தில்...
பிரித்தானியாவில் கொவிட் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக...
இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர். பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் . இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும்...