மாவீரர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்கள் இல்லை, ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்ளும் இல்லை. தங்களையும் தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியுள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு வருகை...
தாய்லாந்து நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துப் பொதுமக்கள் இக்கஞ்சா செடியினை வரையறுக்கப்பட்ட அளவு தமது சொந்தத் தேவைகளுக்காக வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அங்கு பாஸ்ற் பூட்களில் மிக முக்கியமான உணவாக பீட்சா...
விவசாயிகளினதும் பொதுமக்களினதும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றோம் என்று கூற வந்த அரசாங்கம் அதனை வெளிப்படையாகக் கூறாது சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் கிட்டும் என்று மறைமுகமாகக் கூற வந்ததின்...
அறிகுறிகள் இன்றி பரவும் கொவிட் தொற்று சமூகத்தில் காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்ற வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். தென் ஆபிரிக்கா, லெசோதோ, போட்சுவானா, சிம்பாப்வே,...
புதிய கொரோனாவின் தாக்கம் காரணமாக பிரிட்டன் 6 நாடுகளுக்கான விமானசேவையை நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவுதலும் அதன் வீரியமும் மிகவும் அதிகமாக உள்ளதால் பிரிட்டன் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள்...
யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் பொலிஸார் மறுப்பு...
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதுடன், அஞ்சலியையும் உணர்வுப்பூர்வமாக செலுத்தியுள்ளனர்....
மீன்பிடிக்க சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா- இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி...
சுரங்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர். ரஷியாவின் சைபீரியா பிரதேசத்தில் லிஸ்ட்வேஸ்னியா எனும் இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர். இச் சுரங்கம் தலைநகரம்...
வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றிய போதே அவர் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். இதன்போது தொடர்ந்தும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்...
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ்...
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
இந்தியா- தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகள், கனடாவிற்கு தப்பிச் சென்றபோது மாலைதீவில் அகப்பட்டனர். அவர்களில், 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஈழத்தில் இருந்து உயிர்...
இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். மேலும், கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில்...
ஆளுங்கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகள் சிலர், அரசின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தியில் உள்ளனர். சாதகமான பல வழிமுறைகள் இருந்தும், மீண்டும் – மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கும் விதத்தில் அரச மேல் மட்டம் முடிவுகளை எடுப்பதாலும், சில...