வாயு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்பிதிகம – மதஹபொலயாய – பொத்துவில பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்...
ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் இன்று (16) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியை விடுவிக்க வேண்டும். இதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; நாடு பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்கும்....
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (17) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச்...
வரலாற்று புகழ்பெற்ற ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டுமென யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார். நேற்று (16) தனியார்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை. இது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். ஐக்கிய...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். இதன்பிரகாரம் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான...
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு. கொழும்பில் ஊடகவியலளார்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்...
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்துக்கு அரசு ஒருபோதும் உடன்படாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அத்துடன் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் தமிழ் கட்சிகள்...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் அம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
பாணந்துறை டிப்பெத்த கிராமம் பொதுமயானமொன்றின் அருகாமையில் அமைந்துள்ளது .கிராமத்தில் ஒரு மாத காலமாக மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் கடும் அசௌகரியங்களை...
வாழ்வா சாவா கட்டத்தில் இலங்கை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், நாளை கடன் தவணையை திருப்பி செலுத்தினால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடன் தவணையை செலுத்துவதற்காக...
இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உட்பட மேலும் பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது ‘மெனிக்கே மகே ஹித்தே….’ என தொடங்கும் சிங்கள பாடல். சமூகவலைத்தளங்களையும் அப்பாடல் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு பிறமொழிகளிலும் பாடப்பட்டது. தற்போது...
சிங்கள மக்கள், மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
இம்மாதம் இறுதியில் இடம்பெறவிருந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒத்திவைத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அரசிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறிகளை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளிப்படுத்தியுள்ளது. எனவே, அக்கட்சியினர் தொடர்பில் முடிவொன்றை எடுத்த பின்னரே அமைச்சரவை...
திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளது தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 54 வயதுடைய படவிகம, லுனுகம்வெஹெர பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் . அவர் திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட...
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எவ்வாறெனினும் நாளை 18ஆம் திகதிவரை வரை நாட்டில் மின் துண்டிப்பு இடம்பெறாது...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில்...
9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில்...
நாடுமுழுவதும் செயற்படும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கே.ஏ.ரம்யா காந்தி அறிவிப்பு விடுத்துள்ளார். அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால்...