கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கனடாவில் முடங்கியுள்ளது. கனடா- ரொரன்டோவில் கடும் பனிப்புயல் வீசியமையால் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் வீதியெங்கும் பனி கொட்டிக் கிடக்கிறது. அத்துடன் விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது....
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை யுவதி சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச...
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ” உரப்பிரச்சினையால் உற்பத்தி...
தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் பதிலளிக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், தரம் குறைவான...
நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்....
தான் வளர்க்கும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்று கட்டில் ஏறி நின்று குழை வெட்டிய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது. கரணவாய் அண்ணா சிலையடி பகுதியைச் சேர்ந்த...
சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்மயானம் அமைப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி நகர சபையின் பொன் விழா மண்டபத்தில் நேற்று நகர சபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும், நாள மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின்...
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம்...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிழ்ச்சியடைவதுடன் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமென கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய கொள்கை...
ஜனாதிபதி கோத்தாவை வாய்க்கு வந்தவாறு சம்பந்தன் திட்டிய சம்பவம் பாராளுமன்றில் அதுவும் பசிலுக்கு முன்னால் நடந்தேறியுள்ளது. 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் பேச்சை...
இந்தியா- தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை(19) ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில்...
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றவில்லை எனில் நாட்டுக்குள் வரத்தேவையில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே...
தடைகளை மீறி சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் பொங்கல் பண்டிகையின் பின் நடாத்தப்படும் எருதாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று...
இந்தியாவின் விருத்தாச்சல நகராட்சி கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நான்கு வீதிகளுக்கு சீல் வைத்துள்ளது. விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஜங்ஷன் ரோடு, வி.என்.ஆர். நகர் செல்லும் வழி, ஆலடி ரோடு, தெற்கு பெரியார் நகர், டிரைவர்...
தைப்பூச திருநாளான இன்று இரவு, வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தவில் நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த...
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது தமிழ் கட்சிகளின் தலைவர்களால் இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கென தயாரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட கடிதம், இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது....
ஜனாதிபதியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான தன்னுடைய...
இலங்கை சர்வதேச சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. கடன்சலுகை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை...
இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை சலுகை அடிப்படையில் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கை லங்கா ஐஓசி நிறுவனத்தினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமது வியாபாரத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக...