கேகாலையில் மண்சரிவில் சிக்கி காணாமல்போன, தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் வீடொன்று சிக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர்...
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, இளவாலை வடமேற்கு ஜெ 222 கிராம சேவகர் பிரிவில் சீரற்ற காலநிலையால் 26 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள் இரண்டு இடைந்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். குறித்த...
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு...
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை...
நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிக குடிசைகளில் இருந்த மக்கள், தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக,தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – பூநகரி, இரணைதீவில் இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக, புநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 02...
மண்சரிவு அபாய வலயங்களிலிருந்து வெளியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக வெளியேற்றப்படுவார்கள். இதற்கான அதிகாரம் அரச அதிபருக்கு வழங்கப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்....
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் உள்ள மணல் திடல் இயற்கையாகவே உடைப்பெடுத்து நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,. நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல்...
நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ...
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக ஈபிடிபியின் ஆதரவுடன் சுயேட்சை குழுவொன்று வெற்றி பெற்றது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக...
நாட்டில் தற்போது மண்ணெண்ணெய் தேவை இரட்டிப்பாகியுள்ளது எனவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்...
நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.சீரற்ற...
நாட்டில் 23 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. வெள்ள நீரில் மூழ்கி 9 பேரும், மண்சரிவில் சிக்குண்டு எழுவரும், மின்னல் தாக்கி இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். அத்துடன், சீரற்ற...
கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர். கேகாலை அத்னாதொட பகுதியில் நேற்றிரவு வீடொன்றின்மீது பாரிய மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூவர்...
சீரற்ற காலநிலை காரணமாக 139 குடும்பங்களைச் சேர்ந்த 463 நபர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருகின்றனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று மாலை 6.30 மணி...
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...
அடை மழை காரணமாக நாளையும்(10) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக யாழ்ப்பான மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின்...
அம்பாறை -காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தின் நான்கு உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 -1.30 மணி வரையில் திருடனொருவன் தலைக்கவசத்துடன், முகக்கவசம்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று மதியம் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த...
நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மாலையுடன் கூடிய சீரற்ற வானிலையால் நின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் யாழ்ப்பான மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலரின் விசேட ஊடக...