அழகுக் குறிப்புகள் – tamilnaadi.com

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?
துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

துளசி பாரம்பரியமாக சில வாஸ்து நன்மைகளை கொண்டுள்ளது என்று பெரியவர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.

துளசியில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய், அழகுசாதனத் தயாரிப்பு, தோல் பராமரிப்பு, வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுகிறது. துளசியின் ஆரோக்கிய நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மன அழுத்தத்தை போக்கும் துளசி துளசியானது மன அழுத்தத்திற்கு எதிரான குணங்களைக் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும். எனவே, ஒரு நபர் மன அழுத்தம் அல்லது கவலையை உணரும்போது ஒரு கப் துளசி டீயை பருகினால், புத்துணர்ச்சி பிறக்கும்.

2. தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் துளசியில் நீண்ட காலமாக அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.மேலும் இவை ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

3. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது துளசி செடியானது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.அதனால் அது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

4.உடல் எடையை குறைக்க உதவுகிறது துளசி ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைகிறது.இது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது.இது உடலின் கொழுப்பு எரியும் செயல்முறையை மேலும் துரிதப்படுத்துகிறது.

5.சிறுநீரக கற்களை கரைக்கிறது துளசி ஒரு சிறந்த நச்சு எதிர்ப்பு பொருள்.எனவே, சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அரு மருந்தாகும்.சிறுநீரக கற்களுக்கு காரணமான யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது.

6. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது துளசி தேநீர் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு இது மிகவும் விரும்பப்படும் மூலிகை டீகளில் ஒன்றாகும்.இந்த மூலிகை டீ நீரழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

7. பல் மற்றும் வாய் ஆரோக்கியம் பல் குழி என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொதுவான பல் பிரச்சனையாகும். நல்ல செய்தி என்னவென்றால், துளசியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை வாயில் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.

8. தோல் மற்றும் முடி நன்மைகள் துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.இது வயது முதிர்வு அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது.இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை குறைப்பதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.

9. சரும பராமரிப்பு துளசி பேஸ்ட் சருமத்தில் ஏற்படும் கறைகள் மற்றும் முகப்பருவைப் போக்க வல்லது.இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் முகச்சுறுக்கங்களை போக்கி சரும பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.

10.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது துளசியில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு கூறுகள் உள்ளன.அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.துளசி இலைகள் அல்லது துளசி டீயை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….
அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் வளர்க்கின்றார்கள்.

இந்து மதத்தின்படி, துளசிச் செடி விலைமதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுவதுடன் வீடுகளில் வைப்பதற்கான முக்கிய காரணம், துளசிச் செடி இலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட துளசிச் செடியை வளர்ப்பவர்கள் அதனை பொருத்தமான திசையில் வைத்தால் அவர்கள் நினைத்ததை விட பல மடங்கு நன்மை கிடைக்கும்.

துளசிச் செடி அதிர்ஷ்டமான செடியாக பார்க்கப்படுகின்றதனால் இந்தச் செடியை வீட்டில் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் துளசிச் செடியைப் பார்த்த பின் ஒரு நாளை ஆரம்பித்தால் அன்றைய நாள் அமைதியாகவும் நிம்மதியாகவும் கடந்து செல்லும் என ஒரு சிலர் நம்புகின்றனர்.

அந்த வகையில் ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்திரம் படி துளசிச் செடியை எந்த திசையில் வைக்கலாம் என்பது குறித்து பின்வருமாறு நோக்கலாம்.

1. வீட்டில் துளசிச் செடி வளர்க்கும் பொழுது வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் வளர்க்க வேண்டும். இவை இரண்டும் நீரின் திசை என்பதால் வீட்டிற்குள் வரும் எதிர்மறையான சக்திகள் அழிந்து விடும்.

2. துளசிச் செடியை கவனமாக வளர்க்க வேண்டும். ஏனென்றால் வீட்டில் வளர்க்கும் துளசிச் செடி காய்ந்து போகக் கூடாது. ஆகையால் வீட்டிலுள்ள பெண்கள் அதனை கவனமாக பார்த்து கொள்வார்கள். அப்படி பார்த்தும் காய்ந்து போனால் அது வீட்டிற்கு ஏதோ தீய விடயம் நடக்க போகின்றது என்பதனை குறிக்கிறது.

3. வாஸ்துப்படி, வீட்டின் தென்கிழக்கு பகுதி “நெருப்பின் திசை” எனப்படும் திசையில் துளசிச் செடி வைக்கக் கூடாது. மேலும் துளசி செடியை தரையில் நடக் கூடாது. மாறாக தொட்டியொன்றில் நடுவது சிறந்தது.

முடி வளர்ச்சி மும்மடங்கு அதிகரிக்க வேண்டுமா..! இந்த ஒரு எண்ணெய் போதும்
அடர்ந்த நீளமான கூந்தலை தான் அனைத்து பெண்களும் விரும்புபவர்கள். முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.

பலரும் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி நீளமான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒன்று போதும்.

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் உச்சந்தலையிலும் தோலிலும் ஆழமாக ஊடுருவி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் வாரம் இருமுறை மசாஜ் செய்யவும்.

ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் கலந்து தடவினால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

ஆலிவ் எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து முடியில் தடவி 1 மணி நேரம் கழித்து முடியை அலசவும்.

வெங்காயச் சாறு, ஆமணக்கு எண்ணெய் சேர்த்து 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை கலந்து பருத்தி துணியால் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை சீராக்கவும், ரசாயனங்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !
சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது ‘கோகோ பட்டர்’. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே ‘கோகோ பட்டர்’ என அழைக்கப்படுகிறது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன.

பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன.

இதில் இருக்கும் ‘பைட்டோ கெமிக்கல்கள்’ எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம்.

சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன. சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.

#Beauty

வியர்க்குருவில் பாதுகாப்பு பெறுவது எப்படி!
வியர்க்குருவில் பாதுகாப்பு பெறுவது எப்படி!

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம். இயற்கை முறையில் தீர்வுகள் * நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும்.

இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும். * வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி.

ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம்.

மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்;

கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

* வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.

* அருகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது ‘அறுகன் தைலம்’, ‘தூர்வாரி தைலம்’ என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

* பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும். * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.

* உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.

* குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.

#Helthy

மஞ்சள் தரும் மகத்துவம்!
மஞ்சள் தரும் மகத்துவம்!

மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே. மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள்.

புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி. மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது.

மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும். மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது.

ஏற்கனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது. நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து அல்லது முட்டா மஞ்சளை உரைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும்.

முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது. இயற்கை அழகோடு மஞ்சள் அழகும் இணைந்து பெண்கள் ஆரோக்கிய அழகை பெற்றிருந்தார்கள். வயது பேதமில்லாமல் முகத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று இளம்பெண்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

மஞ்சளை உபயோகப்படுத்தினால் குறைந்த நாட்களில் பயன்பாடு தெரியும்.கஸ்தூரி மஞ்சளை குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். பெண்கள் சிலருக்கு ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாறுபாடுகள் முகத்தில் தேவையற்ற ரோம முளைக்கிறது.

இத்தகைய ரோமங்களை நீக்க சிறந்த இயற்கை வைத்திய பொருளாக மஞ்சள் இருக்கிறது. தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும்.

எதிர்காலத்தில் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது. மாதவிடாய்க் காலங்களுக்கு முன் சிலருக்கு முகத்தில் சிறு சிறு பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகக் கூடும்.பகல் நேரங்களில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் மஞ்சளைக் குழைத்து பூசி வந்தால் பருக்கள் வருவது தடைபடும்.

#helthy

ஐப்ரோ த்ரெட்டிங் ரிப்ஸ்!
கண்புருவங்களை சீர் செய்யும்போது அதிலுள்ள சில முடிகளை நீக்குவதால் தாங்க முடியாத வலி இருக்கலாம். ஐப்ரோ திரட்டிங்கின்போது வேர்க்காலுடன் சேர்த்து முடிகளை அகற்றுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலியைத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன.

புருவங்களைத் திருத்த வேண்டுமென்று நினைத்தால் 2-3 வாரங்களுக்கு முன்பே நீங்கள் தயார் ஆக வேண்டும். புருவத்தில் நன்றாக முடி வளர்வதற்கு இந்த காலகட்டத்தை தாருங்கள். புருவம் நன்றாக வளர்ந்தபின்னர் திரெட்டிங் செய்யும்போது அதை அழகாக வில்போன்று வளைத்து மார்க் செய்து சிறப்பாக திரெட்டிங் செய்ய உதவும்.

அதேபோல் திரெட்டிங் செய்வதற்கு முன்பாக உங்கள் முகத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும். மேக்கப் போட்டிருந்தாலோ, சன்ஸ்கிரீன் பூசியிருந்தாலோ, அல்லது வேறு எண்ணெய்களை தடவியிருந்தாலோ முற்றிலும் நீக்கி விடுங்கள். ஏனென்றால் திரெட்டிங் அல்லது வேக்ஸிங் செய்யும்போது புருவத்தில் ஏற்படும் புதிய துளைகளுக்குள் சென்று வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது.

புருவத்தைத் திருத்திய பிறகு அந்தப் பகுதியின் மீது ஹெசல் அல்லது அக்னே ஆஸ்ட்ரின்ஜென்ட் கிரீமை தடவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். ஐப்ரோ திருத்துவதற்கு முன்பாக புருவப் பகுதியை மரத்துப்போகச் செய்யலாம். அதற்கென விற்கும் கிரீம்களை வாங்கித் தடவினால் புருவப் பகுதியில் உணர்வற்றுப் போகும்.

அப்படிப்பட்ட கிரீம்களை திரெட்டிங் செய்வதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக தடவிவிட வேண்டும். திரெட்டிங்கினால் ஏற்படும் வலி சிறிதுநேரத்துக்கு அசௌகரியமாக இருந்தாலும் சிலருக்கு சென்சிடிவ் ஸ்கின் இருப்பதால் அவர்களால் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். திரெட்டிங் செய்த 5 நிமிடங்கள் அல்லது கால் மணிநேரத்துக்கு புருவப் பகுதிகள் சிவந்திருப்பது சகஜம்.

#Beauty

இளமையின் ரகசியம் ஐஸ்கட்டி மசாஐ்!
முகத்தை அழகுப்படுத்த நாம் நிறைய பேசியல் செய்கிறோம். அப்படி பேசியல் செய்யும் போது ஐஸ் கட்டிகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது பல பேருக்குத் தெரியாது.

பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வீட்டில் பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றும், எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

1. முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.

2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் எந்த பேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும். மறக்கக்கூடாதவை

1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.

2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.

3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும். 4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.

#beauty

ஆரோக்கியமான நகங்கள் பராமாிக்க ரிப்ஸ்!
அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும்.

அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும்.

அது குறித்து தெரிந்துகொள்வோம்.  நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள்.

பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும். அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது.

ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.

ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.

நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் ‘நகச்சுற்று’ போன்ற பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும்.

எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.

‘கியூட்டிக்கிள்’ எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

#beauty

முடி வளர்ச்சியை தூண்டும் கற்றாளை!
கற்றாழையில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து. அவை தலையில் உள்ள இறந்த செல்களை அழித்து புது செல்களை வளர செய்கின்றன.

எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.

கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு தரும் தாவரம் கற்றாழை. கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன. கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த கற்றாலை ஜெல் மிக நல்லது.

தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது. கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும் போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கற்றாழை தந்து, முடியை பாதுகாக்கிறது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கற்றாழை தலை முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. எனவே கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும்.

இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் வீதம் பத்து முறை இந்த ஹேர் பேக்கை போட்டு விட்டு உங்களுடைய தலைமுடியில் ஏற்படும் நல்ல மாற்றத்தை தெரிந்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும்.

பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தலைப் பெறலாம். இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.

#BeautyTips