மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி மன்னார் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், மன்னார் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நாளைய தினம் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது என தெரிவித்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று...
“மொட்டு கட்சியின் தாய்வீடுகூட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான். எனவே, அக் கட்சியை அழிக்க முடியாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ” தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சிலருக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி...
தாய்லாந்து நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துப் பொதுமக்கள் இக்கஞ்சா செடியினை வரையறுக்கப்பட்ட அளவு தமது சொந்தத் தேவைகளுக்காக வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அங்கு பாஸ்ற் பூட்களில் மிக முக்கியமான உணவாக பீட்சா...
விவசாயிகளினதும் பொதுமக்களினதும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றோம் என்று கூற வந்த அரசாங்கம் அதனை வெளிப்படையாகக் கூறாது சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் கிட்டும் என்று மறைமுகமாகக் கூற வந்ததின்...
அறிகுறிகள் இன்றி பரவும் கொவிட் தொற்று சமூகத்தில் காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்ற வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். தென் ஆபிரிக்கா, லெசோதோ, போட்சுவானா, சிம்பாப்வே,...
புதிய கொரோனாவின் தாக்கம் காரணமாக பிரிட்டன் 6 நாடுகளுக்கான விமானசேவையை நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவுதலும் அதன் வீரியமும் மிகவும் அதிகமாக உள்ளதால் பிரிட்டன் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள்...
யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் பொலிஸார் மறுப்பு...
சுரங்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர். ரஷியாவின் சைபீரியா பிரதேசத்தில் லிஸ்ட்வேஸ்னியா எனும் இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர். இச் சுரங்கம் தலைநகரம்...
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். மேலும், கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...
பாடசாலை மாணவி ஒருவரை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. குறித்த சம்பவம் நேற்று (25) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. 17 வயதுடைய...
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப்...
நுவரெலியா தலவாக்கலை பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. குறித்த சம்பவம் தலவாக்கலை ராணிவத்தை பிரதான வீதியில் மெல்டன் தோட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தின் போது வேனில் சாரதி...
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பீ.சனத் பூஜித இலங்கை பரீட்சை...
தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. நேற்று(25) நண்பகல் முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரு...
ஹேவா லுனுவிலகே லசந்த என்ற தொடர் குற்றவாளி , பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 26 -11- 2021 *மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழில் மாநாடு *காரைநகரில் அரச பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து...
பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும், நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற...