இன்றைய ராசி பலன் 13.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூலை 13, 2024, குரோதி வருடம் ஆனி 29, சனிக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சதயம், பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். இன்று பணிகள் தொடர்பாக நீங்கள் இருக்கக்கூடிய முடிவால் எதிர்காலத்தில் பெரிய நன்மையும், உங்களின் நிதிநிலை பலப்படவும் வாய்ப்புள்ளது. அரசு துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பு மரியாதை பெறலாம். குடும்பத்தினருடன் சுக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில மகிழ்ச்சியான மற்றும் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். இதன் காரணமாக நீங்கள் மும்மரமாக செயலில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் வேலைகளை முடிப்பதில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இன்று எதிரிகள் பலமாக தோன்றுவார்கள். ஆன்மீகப் பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் வேலை, வியாபாரத்தில் புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். மாணவர்கள் படிப்பில் மூத்தவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்களின் நிதிநிலைமை மேம்படும். சிலருக்கு வீடு பராமரிப்பு தொடர்பான விஷயத்தில் செலவுகள் அதிகம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய திட்டங்கள், யோசனைகள் உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தரும். சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சகோதரர், சகோதரிகளே பயனுள்ளதாக இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வேலைகளை முடிப்பதில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் சாதகமான சூழல் இருக்காது. உங்களின் துணை செயல்பாடு உங்களை எரிச்சல் கூட்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். இன்று தொழிலதிபர்கள் பண பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன் தரக்கூடிய நாள். உங்கள் எதிரிகள், சுற்றியுள்ளவர்களிடம் கவனமாக இருக்கவும். உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பப் பெரிய அவர்களின் ஆலோசனை சிறப்பான பலனை தரும். சட்ட தகராறுகளை கவனமாக எதிர்கொள்ளவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் அனுசரித்து செல்லவும். இன்று சுற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். சமூக மற்றும் அரசியலில் உள்ளவர்களின் நம்பிக்கை தன்மை அதிகரிக்கும். இன்று முக்கிய விஷயம் தொடர்பாக பணம் அதிகமாக செலவிட நேரிடும். வியாபாரத்தில் புதிய திட்டத்திற்கான வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பான விஷயத்தில் நல்ல பலனை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். இன்று உங்களின் நிதிநிலை வலுப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை அனுபவிப்பீர்கள். உங்கள் வேலை தொடர்பான விஷயத்தில் மன நிம்மதி ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்காக கொஞ்சம் பணம் அதிகமாக செலவிட நேரிடும். உங்கள் உடல் நிலையில் சில குறைபாடுகள் ஏற்படும். வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சில் இனிமை தேவை. வாழ்க்கை துணையுடன் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பிறருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம். வீட்டின் அலங்காரம், பராமரிப்பதற்காக அதிக செலவுகள் ஏற்படும். உங்களின் நிலுவையில் உள்ள வேலைக்கு முடிக்க இன்று சாதகமான நாளாக அமையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் நிலை குறிப்பிட்ட அலட்சியமாக இருக்காதீர்கள். சிறு பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகுவது நல்லது. வியாபாரம் தொடர்பான பரிவர்த்தனை நிகழ்ச்சி இன்று சிறப்பான நாள். குடும்பத்தில் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் பெரியவர்களின் தலையிட்டால் சுமுகமாக நிறைவேறும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க மான ஜாதகமான நாள். இன்று கஷ்டத்தில் உள்ள சிலருக்கு உதவ நினைப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் உங்களின் புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- nalaiya rasi palan
- palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil raasi palan today
- today palan
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- vendhar tv rasi palan
- vidyadharan rasi palan