இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள சேர்ந்த பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சில மோசமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் கவனம் தேவை. சில சச்சரவுகளில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் நிதானம் தேவை. இனிமையான வார்த்தைகளை பேசவும். மனக்குழப்பத்தால் உங்கள் வேலையில் சில தாமதங்கள் ஏற்படும். இன்று பொறுமையுடன் எந்த ஒரு விஷயத்தையும் கையாளவும். சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். புதிய உறவுகள் தொடங்கும் வாய்ப்பை பெறுவீர்கள். திருமணம் பற்றி யோசிப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தர கூடும். உங்களின் வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்படக்கூடிய நாள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நிதி விஷயத்தில் லாபங்கள் நிறைய கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். பல சவால்களை சந்திக்க நேரிடும். இன்று பொறுமையுடனும், கடினமாகவும் உழைக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று வேலை மற்றும் குடும்பத்திற்கு நேரத்தை சமமாக செலவிடும் மறைக்க வேண்டாம். வணிகத்தில் உங்கள் இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். வாழ்க்கையில் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றிகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்கள் சிறந்த செயல்பாட்டின் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உணவு விஷயத்தில் அக்கறை தேவை. ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்றுசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் வீட்டில் கவனம் மற்றும் அமைதியாக இருப்பதன் மூலம் குடும்பத்தில் சச்சரவுகளை தவிர்க்கலாம். இன்று பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். செலவு விஷயத்தில் கவனம் தேவை.. மன உறுதியுடன் எந்த ஒரு வேலையும் செய்து முடிக்கவும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பம் மற்றும் பணியிடத்தில் உங்கள் கோபத்தை தவிர்த்து நிதானமாக செயல்படவும். பணப்பற்றாக்குறை மனக்கவலையை தரக்கூடியதாக இருக்கும். இன்று பொழுதுபோக்கு விஷயத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலனை பேணும் வகையில் யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது. இன்று உங்கள் இலக்குகளை அடைய முடியும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றிகளை பெறலாம். பணியிடத்தில் போட்டியாளர்களிடம் கவனம் தேவை. வேலையை அமைதியாக, பொறுமையுடன் செய்து முடிப்பது அவசியம். குடும்பத்தில் சச்சரவுகளை தவிர்க்க வேண்டிய நாள். மனதளவில் வலுவாக இருப்பீர்கள். உங்கள் வேலை மற்றும் நேரத்தை நிர்வகிப்பது அவசியம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலை சம்பந்தமாக கடினமாக உழைக்க வேண்டியது நாள். உங்களின் துணையின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்யவும். காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். திட்டமிட்ட விஷயத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். என்ற அனைத்து விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவும். குடும்பத்தினருடன் மனக்கசப்பு, சண்டை சச்சரவுகள் ஏற்படும். உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயத்தில் நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மோசமான நாளாக அமைய வாய்ப்புள்ளது.இன்று வழக்கத்தை விட அதிகமாக செலவு செய்ய நேரிடும் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தவும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து வெற்றியடைவீர்கள். இன்று புதிய உறவின் தொடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து மேலதிகாரிகளின் நற்பெயரை பெறுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வெற்றியும் அனுபவித்தீர்கள். இது உங்கள் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கும். உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்து இருக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நாள். குடும்ப உறவு வலுப்படும். வருமானம் உயர்வதற்கான சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் சிந்தனையுடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிடுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று புதிய வாகனம், மனதிற்குள் பிடித்த பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. உங்களை சுற்றி உள்ள சூழல் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.