ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 24 பிப்ரவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 24.02.2025 குரோதி வருடம் மாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள சேர்ந்த ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நற்செயல் உங்கள் புகழை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகளை எளிதாக செய்ய முடியும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் செயல்களை கண்டு மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று உலக இன்பங்களை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் சில புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆன்மீக தரிசனம் செல்ல வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் அதிகாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு செயல்களில் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. தந்தையின் உதவியால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சட்ட விவகாரங்களில் ஏமாற்றமான சூழல் இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. பெற்றோரின் கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரம், தொழில் தொடர்பாக எதிர்பார்த்து வெற்றி பெறுவீர்கள். சில முக்கிய குடும்ப பிரச்சினைகளை பெற்றோருடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பீர்கள். தொழில் தொடர்பான பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடினமான நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குடும்பத்தொழில் தொடர்பாக தந்தையின் வழிகாட்டுதல் கிடைக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் எந்த ஒரு புதிய திட்டத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். உங்கள் வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். இதனால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பணம், பொருள் ஆதாயம் பெறுவீர்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இந்த வீட்டில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டிய நாள் எந்த ஒரு வேலையும் பொறுமையுடன் எதிர்கொள்ளவும். இன்று எதிர்பார்த்த வேலைகளை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பெண்கள், சக ஊழியர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிதமான நற்பலன் கிடைக்கக்கூடிய நாள். தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். உங்கள் வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவும். இன்று வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். எதிரிகள் தொடர்பான விஷயத்தில் கவனமாக முடிவெடுக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் பொறுமையுடன், முடிவெடுக்கும் விஷயத்தில் நிதானம் தேவை. குழந்தைகளின் வேலை, திருமணம் தொடர்பாக நல்ல விஷயம் கிடைக்கும். இன்று பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இன்று வேலை, முதலீடு தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. வேலையில் சோம்பேறித்தனம் இருக்கும். புதிய முதலீடு திட்டங்கள் தொடர்பாக கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று நீங்கள் எதிர்பார்த்த கடன் எளிதாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் எளிதாக முடிக்க முடியும்.