ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 23 ஜனவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 23.01.2025, குரோதி வருடம் தை மாதம் 10, வியாழக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உத்திரட்டாதி, ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் நலம் மற்றும், உணவு பழக்க வழக்கத்தில் கூடுதல் கவனம் தேவை. வயிறு வலி மற்றும் சோர்வு பிரச்சனை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இன்று முக்கியமான வேலைகளை முடிப்பதில் அவசரப்பட வேண்டாம். இன்று பிறரின் அன்பு மற்றும் மரியாதை பெறலாம். உங்கள் தொழிலில் எதிர்பார்த்ததை விட வருமானம் குறைவாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர் பாலினத்தவர் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அன்பானவர்களின் ஆதரவும், அன்பையும் பெறுவீர்கள். கடந்த காலத்தில் செய்த தவறுக்கான பயம் மனதில் ஏற்படும். உங்கள் வேலை வியாபாரம் தொடர்பாக திருப்திகரமான பணவரவைப் பெறுவீர்கள். இன்று தேவையற்ற செலவுகள் தவிர்ப்பது கட்டாயம். உங்களின் உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலம் மோசம் அடைய வாய்ப்பு உள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலை சற்று மன ஆறுதலை தரும். இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற சிறப்பான பலனை பெறுவீர்கள். அனுபவம் வாய்ந்தவரின் ஆலோசனை உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்தவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் புத்திசாலித்தனம், கடின உழைப்பால் லாபம் அடைவீர்கள். இன்று சரியான நேரத்தில் சிறப்பான முடிவை எடுப்பீர்கள். என்ற மதியம் வரை உங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வேலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இன்று உங்கள் குடும்பம், தொழில் தொடர்பான பிரச்சனைகளில் மூத்த நபர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சூழ்நிலை உங்களுக்கு எதிராக இருக்கும். ஒவ்வொரு பணியையும் சிந்தனைகளும் செய்யவும். நடைமுறை எதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. உங்களின் சோம்பல் மற்றும் சோர்வு காரணமாக வேலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டில் வயதானவர்களின் உடல் நலம் தொடர்பாக செலவுகளை ஏற்படும். பணியிடத்தில் பணவரவு அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வழக்கத்தை விட சிறப்பான நாளாக அமையும். லாபத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்படும். மனதில் குழப்பமான சூழல் இருக்கும். பண விஷயத்தில் நிதானமாக செயல்படவும். இன்று சக ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட குறைவாக கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்வது நல்லது. உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்க தாமதம் ஆகும். இன்று உங்களின் கடின உழைப்பால் பண ஆதாயம், புதிய உறவுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அரசு தொடர்பான பணிகள் முடித்து மனநிறைவு ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனநிலை மகிழ்ச்சியாகவும், செலவுகளில் ஆடம்பரமாகவும் இருப்பீர்கள். உங்கள் வணிகம் தொடர்பாக சில தடைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு ஒழுக்கக்கேடான செயல்களையும் தவிர்க்கவும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
தனுசு ராசி பலன்
சு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் உடல் நலம் சிறப்பான ஒத்துழைப்பு தரும். வியாபாரம் சார்பாக சில குழப்பமான சூழல் ஏற்படும். பழைய முடிவுகள் அல்லது புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள் இன்று தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் தேவையற்ற சிக்கல் சந்திக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று சுயநலம் அதிகமாக இருக்கும். சமூகத்தில் செல்வந்தர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் அல்லது பொது இடத்தில் தற்பெருமையைக் காட்ட முயற்சிக்க வேண்டாம். இன்று குடும்ப பெரியவர்களை விட்டுக் கொடுத்து செல்லவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற சரியான திட்டமிடல் அவசியம். உங்கள் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. உங்களின் நிதி ஆதாயத்திற்காக வேறொருவரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று அவசரத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் வேலையில் கவனம் தேவை. இன்று பிறரை சார்ந்து இருப்பது, பிறரின் கட்டாயத்தின் பெயரில் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் கணவரின் சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.