ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 22 ஜனவரி 2025 – Daily Horoscope

Published

on

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப பிரச்சினைகள் உங்கள் மன அமைதியை பாதிக்கும். நாள் முழுவதும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இது உங்களின் மன அழுத்தத்தை குறைக்கும். இன்று உங்கள் குடும்ப சூழ்நிலை அலைச்சலை அதிகரிக்கும். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நிலை சற்று பாதிப்பு பெற வாய்ப்புள்ளது. இன்று பிறரின் கட்டாயத்தின் பெயரில் எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது செயலையும் செய்ய வேண்டாம். என்று உடன்பிறந்தவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சிலருடன் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் சச்சரவுகள் அமைதியின்மையை ஏற்படுத்தும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான பலன் தரக்கூடிய நாள். நாளின் முதல் பகுதியில் உங்கள் குடும்பம் தொடர்பான முக்கிய பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் தொழில், வணிகம் தொடர்பாக வெற்றிகரமான நாளாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் கடைசியில் சிறப்பான வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அனைவரிடமும் இனிமையாக பழக முயற்சிக்கவும். உங்கள் பேச்சில் ஆணவம் வேண்டாம். உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக வர எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். இன்று போட்டி அதிகமாக சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களுக்கு அதிக வேலை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. உடல் நலம் சார்ந்த பிரச்சனை ஏற்படும். சிலருக்கு சோர்வு, கோபம் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் சிறப்பாக பூர்த்தி அடையக்கூடிய நாள். இன்று உங்களின் செலவு மற்றும் தனிப்பட்ட உறவுகளை சமநிலைப்படுத்துவதில் கவனம் தேவை. உங்கள் சொந்த தொழில் தொடர்பாக பிரச்சனைகளை சமாளிக்க நிதானம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் செயல்படவும். தேவைக்கேற்ற பல அதயம் பெறுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சில் நிதானம் தேவை, அதிர்ஷ்டம் இன்று உறுதுணையாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான சில பிரச்சனைகள் தீரும். தொழில் பக்தியுடன் செயல்பட்டால் மேன்மை அடையக்கூடிய நாள். மனதுடன் உங்கள் வேலையைச் செய்யுங்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். இன்று லாபத்தைப் பெற்றிடலாம். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பிரச்னைகளை கடந்து சிறப்பான பலனை அடைந்திடுவீர்கள். உங்கள் வீட்டில் நிலவும் பிரச்சனைகள் தீரும். இன்று உங்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். மாலையில் திடீர் லாபம் உண்டாகும்.
குடும்ப சுப காரியங்கள் தொடர்பாக உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். பணியிடத்தில் நம்பிக்கையுடன் உழைப்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பெரியளவில் சாதகமாக இருக்காது. இன்று நீங்கள் தெரியாத நபருடன் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் கவனம் தேவை. இன்று தேவையில்லாத துக்கங்களாலும், கவலைகளாலும் மனம் தளர்ந்து போக நேரிடும். இன்று கடினமாக உழைத்த பின்னரே நற்பலனை பெற்றிட முடியும். உங்களின் சமூகப் பொறுப்பும் கூடும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உங்களுக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கும். மற்றவர்களிடம் சிக்கிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்மிக விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்காதீர்கள். வேலையில் இருப்பவர்கள் அதிகமாக அலைச்சல் ஏற்படலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். எந்தவொரு விமர்சனத்திற்கும் கவனம் செலுத்த வேண்டாம், உங்கள் வேலையை மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பது நல்லது. இந்த நாளில், உங்கள் சமூக சேவை தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இன்று எந்த விஷயத்திலும் அலட்சியத்துடன் செயல்பட வேண்டாம். மன உறுதியுடன் செயல்பட்டால் பிரச்னைகளை சமாளித்து தீர்வு காண்பீர்கள். இன்று மனம் சற்று அமைதியின்றி காணப்படுவீர்கள். சோகமாக உணர்வீர்கள். பயணம் செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடினமாக உணர்வீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் பெரியளவில் இருக்காது. அவசரமாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். இன்று வீட்டின் விஷேசம் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நல்லுறவைப் பெறுவீர்கள். மன சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. மாலை நேரத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களைப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

Exit mobile version