ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வணிகத்தில் நல்ல நிதி நன்மைகளை பெறலாம். சமூகத்தில் நண்பர்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் கொண்ட பிரச்சனைகள் விலகி நிவாரணம் பெறுவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் வேலைகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா வகையிலும் சிறப்பான நாளாக அமையும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள். புதிய வருமானத்திற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்கள் படிப்பை சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான பணத்தை முதலீடு செய்வீர்கள். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும். வாய்ப்புகள் குறைவாக கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் புதிய யோசனைகள் உடனடியாக செயல்படுத்த நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இன்று ஆன்மீக யாத்திரை செல்ல விடுவீர்கள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் பேசி மகிழ்கிறீர்கள். இன்று உங்களின் மன சுமை குறையும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்கொண்டு வரக்கூடிய சில சிக்கல்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிறைந்திருக்கும். உங்கள் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் நேரத்தை செலவிடலாம். பழைய வேலைகள், மனக்குறைகள் தீரும்.

 

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில், வியாபாரம் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் சில ஏமாந்து சந்திக்க நேரிடும். இன்று யாருடைய யோசனையின் பேரில் தொழில் செய்வது, முடிவெடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் உங்கள் வேலையை தடுக்க முயற்சி செய்வார்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அரசு தொடர்பான பணிகள் முடிப்பதற்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் பேச்சு, செயல் மூலம் மரியாதை பெறுவீர்கள். அரசியலில் பதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக சிந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். பிள்ளைகளிடம் வந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்க போராடுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் நேரத்தை ஒதுக்க முடியாத சூழல் இருக்கும். பெற்றோர் மீது மன கசப்பு ஏற்படும்.இன்று உங்களின் சிறப்பான நிதி நிலையில் கடன்களை தீர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தை கவனம் தேவை.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. உங்கள் வருமானத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்படவும். இன்று எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள். திருமணம் முயற்சியில் நல்ல வரன் தேடி வரும். காதல் உங்களுக்கு குடும்பத்தில் ஒப்புதல் கிடைக்க . வாய்ப்புள்ளது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வணிகத்தில் பல்வேறு வருமான ஆதாரங்கள் பெறுவீர்கள். நிதிநிலை வலுவாக இருக்கும். தந்தையின் ஆலோசனை உங்களுக்கு உதவும். வியாபாரம் தொடர்பாக சில ஏமாற்றமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். வீட்டில் அமைதியான தருணங்களில் செலவிடுவீர்கள். இன்று உங்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனரீதியாக நிம்மதியாக உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர இணக்கமான சூழல் இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. துணையின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்புகள் அமையும். இன்று அனுபவ சாலிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவும். தொழில் தொடர்பாக புதிய பிரச்சினைகள் எதிரிகள் தோன்ற வாய்ப்புள்ளது. இன்று மிகுந்த உற்சாகத்துடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக திடீரென லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. சிலருக்கு வயது தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கடின முயற்சி தேவைப்படும். இன்று பயணங்கள் இனிமையானதாக அமையும். குடும்பத்தில் திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

Exit mobile version