ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 15.01.2025, குரோதி வருடம் மார்கழி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தடைப்பட்ட வேலைகளை முடிக்க அவசரப்படுவீர்கள். அவசரத்தால் உங்கள் வேலையில் பிரச்சனைகள் ஏற்படும். இன்று சரியான திட்டமிடலுடன் செயல்படவும். பணியிடத்தில் உங்கள் சூழல் சாதகற்றதாக இருக்கும். நிதி சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமும் கிடைக்கும். தொழில் எதிர்பார்த்ததை விட லாபம் குறையும். குடும்ப சூழ்நிலையில் விட்டுக்கொடுத்து செல்லவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உடல் ரீதியாக சோர்வாக உணர்வீர்கள். வேலை தொடர்பாக கவனம் தேவை. உங்கள் வேலைகளை சரியான திட்டமிட்டு செயல்படவும். உங்கள் மன அமைதியை காப்போம். உங்கள் பணியிடத்திலும், குடும்பத்திலும் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் நலத்தை புறக்கணிக்க வேண்டாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உங்கள் செயலில் தடுமாற்றம் இல்லையே முன்னேற்றம் அடைவீர்கள் . உங்கள் ஆடம்பரத்தை கைவிடவும். இன்று ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்து முடிக்க வேண்டி சூழல் இருக்கும். இன்று பல்வேறு மூலங்களிலிருந்து நிதி நன்மைகளை பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வீட்டில் சாதகமான சூழல் நிலவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமற்ற பலன்கள் தரக்கூடிய நாள். இன்று உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணருவீர்கள். இன்று திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. வீட்டிலும், வெளியிடத்திலும் உங்கள் பேச்சால் சிக்கல் ஏற்படும். அதனால் இனிமையான வார்த்தைகளை பயன்படுத்தவும். வேலையில் நிதி ஆதாயம் உண்டாகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பழைய கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் அதிக லாபத்தை ஈட்ட வாய்ப்பு உள்ளது. இன்று புதிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். இன்று ஆடம்பரமாக அதிக செலவு செய்வீர்கள். சமூகத்திலும், குடும்பத்திலும் உங்கள் நிலை மேம்படும். தர்மம் செய்வதற்கு வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப பிரச்சினைகளால் உங்கள் கவலை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. சொத்து தொடர்பான விஷயங்களில் இந்த வேலையிலும் அவசரப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு செய்ய வேண்டாம். இல்லையெனில் பின்னர் வருத்தப்பட வேண்டியது இருக்கும். பணியிடத்தில் தொழில் தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். குடும்ப பிரச்சினைகளால் வேலையில் கவனம் செலுத்த இயலாது. இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யும் வேலையில் சரியான திட்டமிடல் தேவை. உங்களின் அனைத்து முக்கியமான பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். பணி சுமை காரணமாக குடும்ப பொறுப்புக்கள் தடைப்பட வாய்ப்புள்ளது. இன்று நிதி ஆதாயம் குறைவாக இருக்கும். ஆனால் மனதிருப்தி இருக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் அன்பும் மரியாதையும் கிடைக்கும். இன்று கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதும், வாக்குவாதத்தை ஈடுபடுவதையும் தவிர்க்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பகுதியில், ஜாதகமற்றதாக இருந்தாலும் பின்னர் வேலையை சிறப்பாக செயல்படுவீர்கள். வணிகம் தொடர்பாக தடைப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று வேலை தொடர்பாக கவனம் தேவை. குடும்ப பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். நிதி ஆதாயம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் பெரும் பகுதி அமைதியாக கழியும். குடும்ப விஷயங்களில் உங்களுக்கு மன பாரத்தை தரும். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ளவும். நடத்தி ஏற்படக்கூடிய மாற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். இன்று உங்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக என்ன முயற்சி செய்தாலும் அதில் சிறிது தாமதம் ஏற்படும். சக ஊழியர்களை அரவணைத்து செல்லவும். உங்கள் சூழல் கடினமாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்த முக்கியமான வேலையிலும் முதலீடு செய்ய வேண்டாம். இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். தொழில் தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையை சரியாக முடிக்க முடியும். போட்டிகள் குறையும் என்பதால் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் ஆசை நிறைவேறி உற்சாகம் அடைவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சூழ்நிலை சாதகமாக இருக்கும். எந்த வேலையிலும் தீவிரமாக திட்டமிட்டு செயல்படவும். பணியிடத்தில் உங்களின் சார்பாக நடவடிக்கை பாராட்டு கிடைக்கும். உங்கள் பேச்சு, செயலில் நிதானம் தேவை. உங்கள் இயல்பில் எரிச்சல் மனநிலை இருக்கும்.