ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 6 ஜனவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 6.01.2025 குரோதி வருடம் மார்கழி 22, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைத்து திருப்தி அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இன்று எதிர்பார்த்ததை விட செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் மங்களகரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. சமூகப் பணிகளுக்காக சுப செலவுகள் செய்ய நினைப்பீர்கள். இதனால் உங்களின் புகழும், நற்பெயரும் உயரும். உங்கள் மனைவியிடம் இருந்து முழு ஆதரவையும் பெறுவீர்கள். தந்தையின் உடல்நிலை கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வணிக திட்டங்களில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று எந்த ஒரு பண பரிவர்த்தனை விஷயங்களிலும் கவனம் தேவை. பெரிய முதலீடு, பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் நிச்சயமான வெற்றி பெறுவீர்கள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். அதுவே உயர்வுக்கு தடை ஏற்படலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். அலுவலக சூழ்நிலை உங்களுக்கு ஜாதகமாக இருக்கும். விருந்து விழாக்களில் பங்கேற்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க திட்டமிடுவீர்கள். உங்கள் சாம்பலை கைவிட வேண்டும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மும்முரமான நாளாக அமையும். உங்கள் மனம் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் அமைதி உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை ஏற்படலாம். இன்று பண செலவு அதிகரிக்கும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் பாராட்டுகளை பெற வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் அவசரப்பட வேண்டாம். நிதானமாக செய்யக்கூடிய வேலை, எடுக்கக்கூடிய முடிவில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பேச்சில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசி மகிழ்வீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு புதிய வேலை தொடங்கினாலும் அதில் சிறப்பான லாபமும், நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். சொத்து தொடர்பான தகராறுகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடன், பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அலைச்சல் ஏற்படும். இன்று உங்கள் வேலை தொடர்பான பயணங்களில் கவனம் தேவை. வாகனம் பழுது தொடர்பாக பணம் அதிகமாக செலவாகும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சொந்த தொழில், வியாபாரம் தொடர்பாக யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கடின உழைப்பிற்கான சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுக்கு பணம் ஏற்பாடு செய்ய நினைப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். இன்று உங்கள் செயலை காண அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிலருடன் கூட்டு சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். குடும்பத் தொழிலில் நல்ல லாபம் பெறலாம். அன்றாட செலவுகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இன்று பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். அவர்களின் திருமணத்திற்கு நல்ல வரம் அமையும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இந்த வேலையிலும் கவனம் தேவை. குறிப்பாக உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மருத்துவ ஆலோசனை கருத்தவராதீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பிள்ளைகளும் செயல் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில் தொடர்பான முதலீடு விஷயத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். உங்களின் முதலீடு மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனத்துடன் நீங்கள் செய்யக்கூடிய வேலையை சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுக்கு உதவ நினைப்பீர்கள். குடும்பத்தின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.