ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் 22.12.2024, குரோதி வருடம் மார்கழி 7 ஞாயிற்று கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் மனமகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். உங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் மிக சாதகமான சூழல் இருக்கும். மாலை நேரத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று பெரிய பணத்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிநிலை வலுப்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை ஆதரவால் மன நிம்மதி பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் நல பிரச்சினை தொடர்பாக உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் அடைவீர்கள். மாலை நேரத்தில் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், திட்டங்களில் சிறப்பான நன்மை கிடைக்கும். மாமியார் வீடு மூலம் இது ஆதாயம் பெறுவீர்கள். இன்று புதிய வீடு, மனை வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தந்தையின் கண் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். மாணவர்களின் உயர்கல்விக்கான பாதை அமையும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்வாதார துறையில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உறவினர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வங்கி அல்லது நிறுவனத்தில் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது எளிதாக கிடைக்கும். தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். சிலவருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை பெறலாம். நீங்கள் எதிர்பார்த்த அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வணிகத்தில் சில முக்கிய திட்டம் உங்களுக்கு வெற்றியை தரும். உங்களின் நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள தகராறுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை உங்கள் தொழிலில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். முக்கிய செயல்களை முடிப்பதில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் நிச்சய வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழலை கடைப்பிடிக்கவும். உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று பணம் முதலீடு செய்யும் விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை இல்லை எனில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இன்று பொறுமையுடனும், தைரியத்துடனும் உங்கள் வேலையை எதிர்கொள்ளவும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயமும், மரியாதையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சிறப்பான ஆலோசனை மற்றும் சிந்தனை மற்றவர்களுக்கு ஆதாயத்தைத் தரும். பிறருக்கு உதவ விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வேலை பல அதிகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் லாபகரமான வாய்ப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். இன்று எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் போட்டி அதிகரிக்கும். உங்கள் வேலையில் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்களை காண்பீர்கள். வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல தகவல்கள் தேடி வரும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் காட்டுவதைத் தவிர்க்கவும். உங்கள் வேலையை முடிப்பதில் கவனமாக செயல்படவும் இல்லை எனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு சில கெட்ட செய்திகளை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் புதிய மாற்றங்களை காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீடு மற்றும் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று சற்று கவலையுடன் இருப்பீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உள்ள கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் தீரும். உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.

Exit mobile version