ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேகம் ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
​மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். மிகவும் பயனளிக்க கூடிய நாளாக இருக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானம் தேவை. இல்லை எனில் பெருமை இழப்பை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். திடீர் பண ஆதாயங்களை பெறுவீர்கள். தொழிலதிபர்கள் கடின உழைப்பிற்கு பின்னரே எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் கவனம் தேவை. மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். சமூக வட்டாரம் அதிகரிக்கும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இன்று எல்லா விஷயத்திற்கும் நல்ல நாளாக அமையும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் மும்முரமாகச் செயல்படுகிறார்கள். உங்கள் வேலையை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். வேலையில் எதிரிகளையும், விமர்சனத்தையும் புறக்கணித்து உங்கள் திறமையை காட்டவும். உங்கள் சமூகப் பணி தொடர்பான செயல்பாட்டில் சிறப்பான வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெற்றோரின் சேவையில் ஈடுபடுகிறது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கவலைகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு கவலை குறையும். வியாபாரம் தொடர்பாக சில புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் ஏமாற்றம் அடைவீர்கள். இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் திருப்பி செலுத்துவதில் சிக்கலை ஏற்படும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று குடும்ப பொறுப்புக்கள் மற்றும் வேலை தொடர்பாக பணிச்சுமை ஏற்படும். குடும்பத்தில் சில பதட்டமான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை அமையும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து சம்பந்தமான தகராறு தீரும். உங்களின் செல்வம் பெருகும். குழந்தைகள் தொடர்பான கவலை நீங்கும். வேலை, கல்வி தொடர்பான வெளியூர், வெளிநாடு முயற்சிகள் முன்னேற்றம் அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் நல்ல ஆதரவைத் தெரிவிப்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். அரசு தொடர்பான வேலைகள் வேகமாக முடியும். இன்று பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் செய்யக்கூடிய எந்த ஒரு பணியிலும் மகத்தான பலனை பெறுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உங்கள் வேலையை முடிக்க முயற்சி செய்தால் அது சிறப்பாக முடியும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் தொடர்பாக பெற்ற அலைச்சல் ஏற்படும். நண்பருக்கு தேவையான உதவி அல்லது பணம் தொடர்பாக ஏற்பாடு செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணபலம் அதிகரிக்கும். குடும்பச் சூழல் சற்று கவலை தருவதாக இருக்கும். உங்களின் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடினமான சூழல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வலி, வேதனைகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

கும்பம் ராசி பலன்
​கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் சிறிய அளவில் லாபம் கிடைத்தாலும் மனமகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உங்களின் பழைய கடன்களை திருப்பி செலுத்த முயல்வீர்கள். உத்தியோகத்தில் நண்பர்களின் உதவியால் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்காக கொஞ்சம் பணம் அதிகமாக செலவாகும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மதியம் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த ஒரு வேலையிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை மதியம் வரை எடுப்பதை தவிர்க்கவும். இன்று பணம் பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பம் மற்றும் பணி சூழலில் அனுசரித்துச் செல்லவும். இல்லை எனில் உங்கள் உறவில் ஏற்படும். இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

Exit mobile version