ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில் தொடர்பான பயணம் செல்ல வெற்றி கிடைக்கும். பிறரை நம்பி எந்த ஒரு செயலிலும் இறங்க வேண்டாம். எந்த முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. இல்லையெனில் எதிர்காலத்தில் வருத்தப்பட நேரிடும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் முயற்சி தேவைப்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சில முக்கிய வேலைகள் செய்து முடிக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். இதனால் சற்று கவலை அடைவீர்கள். குடும்ப பிரச்சனைகளை மூத்தவர்களின் உதவியால் தீரும். சமூகப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உறவினர்களுக்கு உதவ முன்வருவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அரசு வேலை செய்யக்கூடியவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கூட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக ஸ்தலத்திற்குச் சென்று வருவீர்கள். உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சொந்த தொழிலில் உள்ள சிக்கல்கள் தீரும். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை செலவிட முடியாத சூழல் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி ஆறுதலை தரும். இன்று சில முக்கிய வேலைகளை முடிப்பதில் மும்மரமாக செயல்படுகிறார்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் சற்று கவனமாக செயல்படவும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். வேலை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் கொடுத்த கடன் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதிநிலை பலப்படும். அன்புக்குரியவர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிக்காக அதிக பணம் செலவாக வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று புதிய திட்டங்களை நல்ல முன்னேற்றத்தை காணலாம். இன்று நீங்கள் எதிர்பார்த்த கடன் திரும்ப கிடைக்க தாமதம் ஏற்படும். இதனால் குடும்ப உறவை விரிசலில் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் முன்னேற்றம் ஏற்படும். இந்த பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள், பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை அல்லது தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நண்பர்களின் உதவி அல்லது ஆலோசனை கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். காதல் விஷயத்தில் குடும்பத்தினரின் ஒப்புதல் கிடைக்கும். திருமண உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சில நாட்களாக இருந்த தடை, தாமதம் விலகும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் இன்றும். வருமானம் சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் திட்டமிட்ட வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலையை மாற்ற நினைப்பவர்கள் கவனமாக முடிவு எடுக்கவும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் பொறுப்புகளை கவனமாக செய்து முடிக்கவும். வழக்கு வாதங்களைத் தவிர்ப்பது அவசியம். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் செயலில் கவனம் தேவை. குடும்பத்தில் வழக்கமான சூழல் இருக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் உயர்வு கிடைக்கும். சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய உடல் நல பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனக் குறைவாக இருக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில் மன பதற்றம் ஏற்படும். உங்கள் பேச்சில் இனிமையே கடைப்பிடிக்கவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. இன்று வீட்டின் தேவைக்காக பணம் அதிகமாக செலவாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் ஈகோவை விடுத்து சிந்தித்து செயல்படுவது நல்லது.