ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் 30.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 13, புதன் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

 

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு தேவைப்படும். கூட்டு முயற்சியால் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் சிறப்பான வெற்றி அடையும். முக்கிய முடிவுகள் அல்லது வேலையில் அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனை உத்வேகத்தை தரும். இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த சொத்து தகராறுகள் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

 

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலையை செய்தாலும் அதில் முழு ஆர்வத்துடன் செய்வீர்கள். உங்கள் பணியில் சிறப்பான வெற்றியை பெறலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான நடவடிக்கைகளில் கொஞ்சம் பணம் செலவிடுவார்கள். இன்று உங்களின் செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று புதிய திட்டங்களில் நேரத்தை ஒதுக்குவீர்கள்.

 

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிக்க கடினமான உழைப்பு தேவைப்படும். புதிய வேலை அல்லது ஒப்பந்தங்களை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. வீட்டில் மற்றும் வேலையில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். எந்த வேலையிலும் முதலீடு செய்யும் முன் கூடுதல் கவனம் தேவை.

 

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள். இன்று நீங்கள் நினைத்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தங்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். முக்கிய விஷயங்களின் ஆதரவு தேவைப்படும்.

 

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலையிலும் விதி முறைக்கு உட்பட்டு செயல்படவும். இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் செய்யக்கூடிய கடின உழைப்பில் மகிழ்ச்சி அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று நெருக்கமானவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டியது இருக்கும்.

 

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டீர்கள். முக்கிய வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பண பற்றாக்குறை சந்திக்கவாய்ப்புள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

 

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வியாபாரத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும். மாமியார் மூலம் நிதி ஆதாயம் பெறுவீர்கள்.

 

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு தங்கள் வேலையில் சுறுசுறுப்பான சூழல் இருக்கும். பலவிதத்தில் நன்மை அடைவீர்கள். வியாபாரத்தில் பணம் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். பண பரிவர்த்தனங்களில் கூடுதல் கவனம் தேவை. வணிகத்தில் புதிய யோசனைகள் செய்வீர்கள். இது எதிர்காலத்தில் சிறப்பான நன்மைகளை தரும். தந்தையுடன் இணக்கமான சூழல் இருக்கும்.

 

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் செய்வீர்கள். இன்று உங்களின் புகழ் உயரும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இன்று சில

தேவையற்றசெலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாட வீட்டு வேலைகளை செய்து முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. மாலை நேரத்தில் மன நிறைவு அடைவீர்கள். இன்று புதிய சொத்து வாங்க முடியாது ஆவணங்களை முறையாக சோதிக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளின் செயலால் மரியாதை அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி வெற்றி அடைவீர்கள். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சமூகத்தில் நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களின் திறமையை நிரூபிக்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியது இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் முடிக்க முடியும். இன்று உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. இன்று குறுகிய பயணம் செல்ல வாய்ப்புள்ளது. சில விஷயங்களை நினைத்து கவலைப்படுவீர்கள். சகோதரர்களின் உதவியால் கடின சூழல் சாதகமாகும்.

Exit mobile version