ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 27 அக்டோபர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் : 27 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 20.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 10 ஞாயிற்று கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து கவலை அடைவீர்கள். அதனால் உங்கள் வேலையில் தொய்வு ஏற்படும். அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரத்தில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியும், நல்ல லாபத்தையும் தரும். உங்கள் மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவருடன் மகிழ்ச்சியான பயணம் செல்ல நினைப்பீர்கள். சிலரின் பேச்சு உங்களை வருத்தமடைய செய்யும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக மருத்துவர்களை அணுகி தீர்வு காண்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் செய்ய நினைக்கக்கூடிய மாற்றங்களில் நல்ல பலனளிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எதை செய்தாலும் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசு வேலைகள் சிறப்பான வெற்றியை பெறலாம். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவருக்கு பண உதவி செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பதட்டமான சூழல் மாறும். உங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்படும். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய நாள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களில் நிறைய லாபத்தை பெறுவீர்கள். உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். சமய சடங்குகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணை வீடு மூலம் சில பிரச்சனைகள் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. நீங்கள் நினைத்த சில விஷயங்கள் நடக்காததால் மனக்கவலை அடைவீர்கள். முக்கிய வேலைகளை செய்து முடிக்க முடியும். மாலை நேரத்தில் பெற்றோருடன் செலவிட நினைப்பீர்கள். காதல் வாழ்க்கையில் பதட்டமான சூழல் இருக்கும். இன்று காதல் தொடர்பாக நிதானமாக செயல்படவும். இன்று பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேற்றவும், பரிசு வாங்கவும் நினைப்பீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். அரசாங்க பணி தொடர்பாக அல்ல வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் செய்து முடிக்க முடியும். பணியிடத்தில் பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்கள் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார். உங்கள் சூழல் மகிழ்ச்சியை தரும். சில அதிகாரிகளின் உதவியால் அரசு தொடர்பான வேலைகள் எளிதாக முடியும். குடும்ப உறுப்பினர்களிடம் நேரத்தை செலவிட நேரம் கிடைக்காது. சிலருக்காக பணம் அதிகமாக செலவிட நேரிடும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றி வாய்ப்பு அதிகம். பணியிடத்தில் பிறரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக லாபமும், சகோதரர்களின் ஆதரவும் கிடைக்கும். புதிய திட்டங்களில் ஈடுபடுவீர்கள். திருமணம் முயற்சியில் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பண வரவுக்கான புதிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கம் தொடர்பான சில சலுகைகள் இழக்க நேரிடும். இன்று தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். இன்று எதிரிகள் கூட உங்களுக்கு நண்பராக மாறுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். அது உங்களின் மன அமைதியை அதிகரிக்கும். உங்கள் செயலில் திருப்தி உண்டாகும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் எதையும் சாதிக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் முன்னேற்றமும், சிறந்த நாளாகவும் அமையும். ஆன்மீக யாத்திரை அல்லது சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பகைவர்களால் உங்களின் திட்டங்கள் அல்லது வேலையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று லாபம் குறையும். நிலுவையில் உள்ள வேலையை முடிக்க சிலரின் உதவி தேவைப்படும். இன்று உங்கள் வேலையை முடிக்க சரியான திட்டமிடல் அவசியம். உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் அதிகரிக்க வேண்டும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும். இன்று சட்டபூர்வமான நடவடிக்கைகளில் கவனம் தேவை. இன்று உங்களின் உடல் அல்லது மனம் தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சி அல்லது முதலீடு சார்ந்த விஷயங்களை தள்ளிப் போடுவது நல்லது. இன்று சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

Exit mobile version