ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 11 அக்டோபர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் : 11 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 11.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 18 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்த நாளாக இருக்கும். கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் வேலை, தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். உங்கள் வேலையை முடிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். இன்று சோம்பேறித்தனமாக செயல்படுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால் எந்த விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். உங்கள் வேலையை பிறரிடம் ஒப்படைப்பது தவிர்க்கவும். உங்கள் பொறுப்பும் வந்து செயல்படவும். உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். உங்களின் நிதிநிலை குறைய வாய்ப்புள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் செயலில், பேச்சில் நிதானம் கடைபிடிக்கவும். வேலைகளை பொறுமையுடன் திட்டமிட்டு செயல்படவும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தேவையற்ற மன விரக்தி ஏற்படும். மனக்குழப்பத்தில் எந்த ஒரு முடிவையும் இருக்க வேண்டாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் கவன குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பான விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. வியாபாரிகள் நினைத்த இலக்கை அடைய அலைச்சல் அதிகரிக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய நாள். ஆக்கபூர்வமான யோசனைகளை நிறைவேற்ற கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பான புதிய திட்டம் நல்ல பலனை தரும். அதற்காக அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேற கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். நிதி ரீதியான திருப்திகரமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தாமதம் ஏற்படும். மன அமைதியற்ற சூழல் இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பொழுது போக்கில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வணிகத்தில் முக்கிய பணிகளை ஒத்திவைக்க வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.தந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் இனிமையான வார்த்தைகளை பயன்படுத்தவோம்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் சார்ந்த பிரச்சினைகள் தீர்க்க மூத்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அது தொடர்பான பண செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இன்று தொழில் தொடர்பான பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை பெறுவது நன்மை தரும். இன்று உணவு விஷயத்தில் கவனம் தேவை. காரமான உணவுகளை தவிர்க்கவும். மாமியார் தரப்பில் இருந்து பணபலம் பெறுவீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். இல்லையெனில் தேவையற்ற தகராறுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அரசியலில் உள்ளவர்கள் பதவிகள் பெற வாய்ப்புள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசு பணி தொடர்பான விஷயத்தில் இருந்த தடைகள் நீங்கும். கூட்டுத்தொழில் செய்யக் கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.​

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நினைத்த இலக்கை சரியான நேரத்தில் அடைய முயற்சி செய்யவும். இன்று கடின உழைப்பு தேவைப்படும். உங்களுக்கு திடீர் பண பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Exit mobile version