ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 08 அக்டோபர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் : 08 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில், வேலை தொடர்பான விஷயத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். சிலரின் செயல்பாடு மன வருத்தத்தைத் தரும். குழந்தைகளின் விஷயத்தில் ஏமாற்றமான செய்திகள் கிடைக்கும். இன்று அன்புக்குரியவர்களே சந்திக்கவும் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் முடிந்த மகிழ்வீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் அல்லது அரசு துறையில் பணிபுரிபவர்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு பிடிக்காத சில நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமான தகராறுகள் தீரும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக நீங்கள் கடினமான முடிவை எடுக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் மீது கோபப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். இன்று சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். உங்களின் விலை மதிப்பு மிக்க பொருட்கள் இழக்கவா அல்லது திருடப்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்து வாங்கும் முயற்சியில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் கூட்டுத்தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குச் சாதகமான நாள். இன்று அன்புக்குரியவர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று உங்களின் வாழ்வாதாரம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் இனிமையான பேச்சால் உங்களின் லாபம், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான புதிய முதலீடு செய்ய நினைப்பீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் செய்ய நினைக்கும் எந்த வேலையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். நிதிநிலை வலுவாக இருக்கும். மாமியார் வீடு மூலம் பண பலன்களை பெறுவீர்கள். இன்று உங்கள் துணையின் உடல் நிலை கவலை தரும். அது தொடர்பாக செலவுகள் ஏற்படும். இன்று சொத்து வாங்குதல் அல்லது விற்பது தொடர்பான முக்கிய முடிவுகளை சுயாதீனத்துடன் கவனமாக எடுக்கவும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் பணப்பரிவர்த்தனை சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இன்று வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று நீங்கள் எதிர்பார்த்த அளவு பணம் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சில இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் முதலீடு செய்ய சிறப்பான நாளாக இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்க்க சிரமப்படுவீர்கள். இன்று உங்கள் இயல்பில் எரிச்சலாகவும், கோபத்துடனும் இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்களின் வருமானம் குறையும், செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் உல்லாசமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகளின் தொல்லை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் வேலையில் பெண் நண்பர்களின் உதவியால் ஆதாயம் அடைவீர்கள். இன்று கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவீர்கள். நெருங்கிய உறவினர்கள் மூலம் பண ஆதாயம் பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் பெறுவீர்கள். அண்டை வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு வயிறு வலி, தலைவலி, அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அனுபவசாலிகளின் உதவியால் தீரும். உங்கள் நடத்தையில் கவனம் தேவை. தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அதனால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும். இந்த பண பரிவர்த்தனைகள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள், தடைகள் நீங்கும். பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். இன்று விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

Exit mobile version