ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 07 அக்டோபர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் 7.10.2024 குரோதி வருடம் புரட்டாசி 21, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த அஸ்வினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு விஷயத்திலும், தேர்விலும் நல்ல முடிவு எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இன்று உங்கள் மனைவிக்கு பரிசளிக்க நினைப்பீர்கள். திடீர் பயணம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பால் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். இன்று உங்களின் வேலைக்கான பலன் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்குச் சிறப்பான வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் பிடிவாதம் மன வருத்தம் தரும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்களுக்குச் சிறப்பான வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். இன்று உங்களின் வருமானம் அதிகரித்தாலும், செலவு விஷயத்தில் கவனம் தேவை.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். வியாபாரத்தில் லாபத்திற்காக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். சில விஷயங்களில் ஏமாற்றம் அடைவீர்கள். இன்று உங்கள் வேலையில் நேர்மையுடனும், கடின உழைப்பும் தேவைப்படும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று உங்கள் பெற்றோருடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை தொடங்குவதிலும், தொழிலுக்கான முதலீடு விஷயத்திலும் நல்ல நாளாக இருக்கும். இன்று உங்களின் முதலீடுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இன்று உங்களின் விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அரசு தொடர்பான வேலையை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். இன்று சோர்வாக இருப்பீர்கள். இன்று வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் பெறுவீர்கள். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். எதிர்கால திட்டம் தொடர்பாக உங்கள் பெற்றோருடன் விவாதிப்பீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். உங்கள் வேலையில் வேகம் குறையும். சோம்பலுடன் இருப்பீர்கள். இன்று உங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு பணம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சிந்தனையுடன் செயல்படவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முக்கிய பணிகளை முடிக்க சிலரின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்க தாமதமாகும். பணம் வருமானத்தில் திருப்தி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் இருந்த சில சச்சரவுகள் தீரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று லாபம் அதிகரிக்கக் கூடிய நாள். நிதிநிலை முன்னேற்றத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. செல்வாக்கு மிக்க நபர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு செயலிலும், முடிவு எடுப்பதிலும் மனதை ஒருமுகப்படுத்திச் செயல்படவும். உங்கள் வேலை பிரச்சனைகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது. சிலரின் உதவி உங்களுக்கு கிடைத்து மகிழ்வீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வேலை, தொழில் தடைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக தடைகள் மன வருத்தத்தை அதிகரிக்கும். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உணவு மற்றும் பானம் விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். உங்களின் புகழ் அதிகரிக்கும். இன்று நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். சில வேலையில் இருந்த தடை, தாமதங்கள் விலகி மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு வெற்றி அதிகரிக்கும். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்கவும்.

Exit mobile version