ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 04 அக்டோபர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் : 04 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 18 வெள்ளிக் கிழமை, சந்திரன் கன்னி, துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் விஷயத்தில் ஏமாற்றமான செய்திகள் கிடைக்கும். இன்று மாலைக்குள் நிலுவையில் உள்ள வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சோதனையும் கலந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணை ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் திருப்தியான மன நிலை இருக்கும். அரசு துறையில் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலைகள் நீங்கும். இன்று விரும்பத்தாக சில நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவியும், கௌரவமும் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் விலைமதிப்பற்ற பொருட்கள் இழக்க நேரிடும் அல்லது திருடப்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்று மங்களகரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. பெற்றோருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளின் கல்வி அல்லது போட்டியில் சிறப்பான வெற்றி மகிழ்ச்சியை அதிகரிக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றதற்கான சாதகமான சூழல் இருக்கும். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான நல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிகம் தொடர்பான பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் நிதிநிலை பலப்படும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணைக்கு பரிசு வழங்க நினைப்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பிள்ளைகளின் படிப்புக்காக அலைச்சல் அதிகரிக்கும். இன்று மாலையில் சற்று சோர்வாக உணர்வீர்கள். இந்த கண் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உச்சயோகத்தில் எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு கவலைப்படுவார்கள். உங்கள் பேச்சில் நிதானமும், மென்மையின் கடைபிடிக்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்தும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் குறுகிய கால வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான சட்ட தகராறுகள் தீரும். உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் தந்தையின் ஆலோசனை தேவைப்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் தேடி வரும். உங்கள் தொழிலில் பல நாட்களாக இருந்து வந்த பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று நீங்கள் திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போக வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். லட்சியங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் கையில் போதுமான அளவு பணம் இருக்கும் என்பதால் மன தைரிய அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணி அல்லது அரசியலில் தீவிரமாக பங்கேற்பார்கள். இன்று மக்கள் ஆதரவு அதிகரிக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். எதிரிகள் விஷயத்திற்கு கவனம் தேவை. இன்று உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கும். இன்று குடும்பஸ்தர்கள் தங்கள் பிள்ளைகளுடன் உல்லாசமாக விளையாடி மகிழ்வீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற பணம் அதிகமாக செலவிட நேரிடும். இன்று உங்கள் செலவை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் மன நிம்மதி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சில மனவருத்தமான சூழல் இருக்கும். சொத்து சம்பந்தமான தகராறுகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகிரகத்தால் பதவி உயர்வு கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலை விஷயத்தில் கவனம் தேவை. இன்று சூழல் பாதகமாக இருக்கும். சிலருக்கு திடீர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. இன்று ஒருவருடன் கருத்து வேறுபாடு அல்லது தகராறு ஏற்படும். இன்று புத்திசாலித்தனம் உங்கள் வேலையை செய்து முடிக்கவும். வியாபாரத்தில் இருந்த தடைகளை நீக்க குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலை அதிகரிக்கும். திருமணம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் அன்பானவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்லவும். உங்களுக்கு பிடித்தமான பொருள் திருடு போக வாய்ப்புள்ளது அதனால் கவனம் தேவை. நீண்ட காலமாக இருந்த திருமண தடைகள் நீங்கும். இந்த குடும்பத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பீர்கள்.

Exit mobile version