ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 30 செப்டம்பர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் : 30 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 30.09.2024 குரோதி வருடம் புரட்டாசி 14, திங்கட் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் தேவையற்ற தடைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய வெற்றியை பெற கடினமாக உழைக்க வேண்டிய நாள். வீடு அல்லது வியாபாரம் தொடர்பான விஷயத்தில் முடிவுகளை கவனமாக எடுக்கவும். சொந்த தொழிலில் நல்ல செய்தி கேட்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றத்தைக் காணலாம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம். எந்த வேலையும் மகிழ்ச்சியும், வெற்றியும் பெற வாய்ப்புள்ளது. உங்கள் எல்லா வேலையும் நிறைவாக முடியும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். எந்த முக்கிய விஷயங்கள் குறித்து சகோதரர்களுடன் விவாதிப்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் மனக்கவலையும், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மாமியார் மூலம் உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். இன்று கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்ப உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் கடினமாக உழைத்தாலும் விரும்பிய லாபம் கிடைக்க தாமதம் ஆகும். இன்று சில ஏமாற்றும் ஏற்படும். அதனால் மன உளைச்சல், அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். உங்களுக்கு விருப்பமான பொருள் தொலையவும் அல்லது திருடப்படவோ வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்வீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற கடினமான சூழ்நிலை இருக்கும். இன்று சிந்தனையுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பாக அதிர்ஷ்டமும், பிறரின் ஆதரவும் நிறைந்திருக்கும். இன்று எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். நண்பர்களுக்கு உதவுவதற்காக பணம் அதிகம் செலவிட நேரிடும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் புகழ் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகள் தொடர்பாக கொஞ்சம் கவலைப்படுவீர்கள். இன்று புத்திசாலித்தனமாக செயல்பட்டால் பிரச்சனைகளை எளிதாக கையாளலாம். இன்று பல வழிகளில் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். இன்று எந்த வேலையிலும் திட்டமிட்டு செயல்படவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சூழலை அனுசரித்துச் சென்றாலும் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வேலை முடிப்பதில் உடல் நலம் தொந்தரவு செய்யும். தாயுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். இன்று மனக்குழப்பமும், தலைவலி பிரச்சினை ஏற்படும். உங்கள் வேலையில் பிஸியாக செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போகும். மாணவர்கள் கல்வி தொடர்பாக தடைகள் நீங்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி, வாகனம் பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் கையில் போதுமான அளவு பண வரவு இருக்கும். குடும்பத்தில் அமைதியின்மை உங்களை தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பதட்ட ஊழல் இருக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாய்ப்புகள் அமையும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அசையும், அசையா சொத்து வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் கவனமாக முடிவு எடுக்கவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். காதல் வாழ்க்கையில் துணையின் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று மங்களகரமான சூழல் இருக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். சற்று கவலையுடன் இருப்பீர்கள். பழைய நண்பர்களே சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதிநிலை வலுவாக இருக்கும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய யோசனைகள் பிறக்கும்.தந்தையின் ஆலோசனை முன்னேற்றத்தைத் தரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்யும். இன்று எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இன்று நிதி நிலையில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சனை தீரும்.

 

Exit mobile version