ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 19 செப்டம்பர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசிபலன் : 19 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2024, குரோதி வருடம் புரட்டாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம், ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் அமைதியற்ற சூழல் இருக்கும். பெண்களிடம் கவனமாக இருக்கவும். இன்று சிறிய விஷயங்களை கூட கவனமாக செய்து முடிக்கவும். தேவையற்ற பேச்சு, பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில குடும்ப உறுப்பினர்களுக்கு திடீர் உடல் நலக் குறைபாடு வருத்தத்தை ஏற்படுத்தவும். இந்த செலவு விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பாதி பலவிதத்தில் மோசமானதாகவும், தடைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை. மதியத்திற்குப் பின் பலவிதத்தில் நன்மைகள் கிடைக்கக்கூடிய நாள். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். இன்று முக்கியமான பணிகளை ஒத்திவைக்க வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு நேற்றைய நாளைய விட இன்று உங்களுக்கு திருப்தி தரக்கூடியதாக இருக்கும். நாளின் முதல் பாதியில் உங்கள் வேலைகளை முடிப்பதில் மும்மரமாகச் செயல்படுவீர்கள். பிற்பகலில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பல நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகளை நிறைவேற்ற முடியும். கணவன், மனைவி இடையே நிதி பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆளுமை பிரகாசிக்கும். இன்று எந்தவித ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபட வேண்டாம். வீட்டின் சூழல் அமைதியற்றதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் குறைய வாய்ப்பில்லை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நிலைமை சீராக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறத் தடை ஏற்படும். மதியம் வரை எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். அனுபவசாலிகளின் ஆலோசனை இல்லாமல் பணம், சொத்து சார்ந்த விஷயங்களில் செயல்பட வேண்டாம். சமூகத்தில் உங்களின் மரியாதை குறையும். இன்று எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். இன்று நேர்மறையான பேச்சு, எண்ணத்தைக் கொண்டிருப்பது நல்லது. நாளின் தொடக்கம் சோம்பலாக உணர்வீர்கள். முக்கிய வேலைகளை முடிப்பதில் கவனமாக இருப்பதோடு, பொழுதுபோக்கைத் தவிப்பது நல்லது. உங்களின் விருப்பங்கள் நிறைவேற தடையாக இருக்கும் நபர்கள் மீது கோபப்படுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று விரும்பத்தகாத சூழல் இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். பல நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். இன்று உங்கள் வீட்டின் செலவு அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண முடியும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று செயல்பாட்டில் கவனம் தேவை. உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உங்களின் சோம்பேறித்தனம் வேலையை முடிப்பதில் தொய்வு ஏற்படுத்தும். உங்களின் உடல்நிலை சற்று பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக லாபத்தை பெறுவீர்கள். வீட்டில் கணவன்-மனைவி இடையே உறவில் விரிசல் ஏற்படலாம்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். இன்று எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதைத் தவிர்த்து வேலையை முடிப்பதில் கவனம் தேவை. இன்று உங்களின் சமூக வட்டம் அதிகரிக்கும். எதிரிகள், தீய குணம் கொண்டவர்களின் சகவாசத்தைத் தவிர்க்கவும். இன்று உங்களின் மனதில் அமைதியற்ற சூழல் இருக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சோம்பேறித்தனத்தால் வேலையில் கவனம் குறைவதோடு, தாமதம் ஏற்படும். உங்களின் வேலை, வியாபாரத்தில் லாபத்தை அதிகமாக எதிர்பார்க்க முடியாது. தேவைக்கேற்ற பண வருவாய் இருக்கும். இன்று உடல்நிலை சற்று பலவீனமடையும். உங்களின் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். செலவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்ய நினைத்தாலும் அதில் கவனம் தேவை. புதிய முதலீடுகள் விஷயத்தில் அனுபவசாலிகளின் கருத்தைக் கேட்கவும். உங்களின் சோம்பேறித்தனத்தால் வேலையில் வேகம் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். நீண்ட பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் நடத்தை விசித்திரமாக இருக்கும். நீங்கள் நினைத்த வகையில் ஒத்துழைப்பு கிடைக்காது. உங்களின் வேலை தொடர்பாக குழப்பமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்த செல்ல வேண்டிய நாள். கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு வருந்த வேண்டியது இருக்கும். இந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம்.

Exit mobile version