ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024
இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சில நாட்களாக இருந்த தடைகள் விலகும். உங்கள் செயலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் புத்திசாலித்தனத்தைச் செயலில் காட்டவும். பிறரிடம் நிரூபிக்க முயற்சிக்க வேண்டாம். இன்று பணத்தை நிர்வகிப்பதில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். உங்களின் உடல்நிலை பராமரிப்பது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டம நாளாக இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை. சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். பணப்பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்க்கவும். கடந்த கால தவறுகளை மறுபரிசீலனை செய்வது நல்லது. வேலை, வியாபாரம் தொடர்பாக ஸ்திரத்தன்மை இருக்காது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மாற நினைப்பவர்கள் கவனம் தேவை. இன்று உங்களின் திறமைக்கும், புத்திசாலித்தனத்திற்கும் மரியாதை கிடைக்கும். கடின உழைப்பிற்கான லாபத்தை எதிர்பார்க்கலாம். பண வரவு மேம்படும். இன்று உங்களின் வரவு, செலவிற்கும் இடைய சமநிலையைப் பராமரிப்பது நல்லது. இன்று வேலைப் பளு அதிகமாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். பிறரின் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதும், வார்த்தைகளில் இனிமையைப் பராமரிப்பதும் அவசியம். வேலை தொடர்பான விஷயத்தில் அலைச்சல் இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஏதேனும் ஒரு வகையில் நன்மைகள் உண்டாகும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலை, வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற அதிக செலவு செய்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் உள்ள ஆசைகள் நிறைவேற்ற முடியும். உங்கள் வேலைகளை முடிக்க பல தடைகளைக் கடக்க வேண்டியது இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். இன்று அதிக செலவு செய்வது தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையுடன் நல்லிணக்கமான சூழல் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றமும், லாபகரமான ஒப்பந்தங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏதேனும் ஒரு வகையில் இன்று பணவரவு இருக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பெண்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சாதகமான நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலையையும் விரைவாக செய்து முடிக்க முடியாத சூழல் இருக்கும். மதியத்திற்குப் பிறகு பணிச் சுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான சூழல் சீராக இருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். பணியிடத்தில் எதிரிகளைச் சமாளிக்க வேண்டியது இருக்கும். இன்று உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டு சூழலை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்கள் செயலில் ஓரளவு வெற்றி பெறுவீர்கள். இன்று முரட்டுத்தனமாக எதையும் செய்ய வேண்டாம். உங்களிடம் பொறாமை உணர்வு அதிகமாக இருக்கும். இன்று யாரிடமும் வீண் பேச்சுக்களில் ஈடுபட வேண்டாம். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பண வரவு எதிர்பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். உங்கள் வீட்டிலும், வெளியிலும் சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியைப் பராமரிக்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு குறைவாக கிடைக்கும். இன்று திடீர் செலவுகள் அதிகரிக்கும். வேலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாளில் தொடக்கத்தில் சாதகமான நாளாக இருக்கும். உங்களின் வேலை, வியாபாரம் தொடர்பாக லாபத்தை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலையை தள்ளிப் போட முயலாதீர்கள். வணிக வர்க்கத்தினருக்கு முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று சில நல்ல செய்திகள் தேடி வரும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மங்களகரமான நாளாக இருக்கும். இன்று விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உங்களின் வேலை, வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். இன்று பணவரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். குடும்பத்தில் தவறான புரிதல்களைத் தவிர்ப்பது நல்லது.