ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2024, குரோதி வருடம் ஆவணி 27, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்களின் இலக்குகளை அடைய வாய்ப்பு உள்ளது. இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை, தொழில் சார்ந்த விஷயத்தில் குழப்பமான மனநிலை இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயலில் வெற்றிகரமான நாளாக இருக்கும். பெரிய முயற்சிகள் கூட பெறலாம். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டாம், வேலையையும் செய்ய வேண்டாம். கடன் வாங்குவது, கொடுப்பதைத் தவிர்க்கவும். இன்று குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பெண்கள் விஷயத்தில் ஏற்படும். உடல்நிலை சீராக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு வேலையிலும் கவன குறைவாக செயல்பட வேண்டாம். பணம் தொடர்பான விஷயத்தில் அவசரம் வேண்டாம். வியாபாரிகள் நம்பிக்கையுடன் உழைக்க வேண்டிய நாள். சிலரின் நிலையை கண்டு பண உதவி செய்ய நினைப்பீர்கள். பிறரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலைகளை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். உங்களின் முயற்சிகள் பெரும்பாலான பணிகள் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாகச் சூழல் மனவருத்தத்தைத் தரும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் போட்டி அதிகரிக்கும். இன்று சிந்தித்து புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் உங்கள் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் மூலம் சிறப்பான பலனடைவீர்கள். இன்று பண வரவு அதிகரிக்கும். கடனை அடைக்க வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கலில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் கவனம் தேவை. கடின உழைப்பிற்கான பலன் பெறுவீர்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்க தாமதமாகும். சக ஊழியர்களின் ஆதரவின்மை உங்களுக்கு மன வருத்தத்தைத் தரும். உடல் நலம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். இன்று குடும்ப விவகாரத்தில் விட்டுக்கொடுத்த செல்லவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அறிவு சார்ந்த வேலையில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று பிறரைக் கிண்டல், கேலி செய்வதை தவிர்க்கவும். பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. பொரித்த உணவுகள், வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் நிறைந்த நாளாக இருக்கும். செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். உங்கள் பேச்சில் இனிமை தேவை. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் குடும்பம், வேலை போன்ற விஷயத்தில் வாழ்க்கையைத் திசை மாற்றும். இன்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் சோம்பலை தவிர்ப்பது நல்லது. உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு புத்துணர்ச்சியுடன் செய்து முடிக்கவும். வியாபாரத்தில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். பணம் சம்பந்தமான விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில குறைகள் இருந்தாலும் இன்று திருப்திகரமான நாளாக இருக்கும். பெண்கள் விஷயத்தில் சூழ்நிலையை அமைதியாக நகர்த்துவது நல்லது. இன்று கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பங்கு சந்தை முதலீடு செய்தல் கவனம் தேவை. இன்று ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் அதிக குறுக்கீடுகள் வரும். இன்று மனதை அமைதியாக வைத்து நிதானமாக செயல்படவும். உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக மெதுவான முன்னேற்றம் இருக்கும். இன்று லாபம், நஷ்டத்தை சிந்திக்காமல் சரியான விஷயங்களை செய்ய முயற்சி செய்யவும். மன அமைதிக்கான வழியை தேடவும். இன்று ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாட பணிகளை முடிப்பதில் அதிக அலைச்சல் ஏற்படும். உங்களின் பல வேலைகள் முழுமையாக முடிக்க முடியாமல் கவலைப்படுவீர்கள். அரசு துறையில் உள்ளவர்கள் கவனமாக செயல்படவும். வேலை தொடர்பாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உடல் நிலையில் பின்னடைவு ஏற்படும்.