ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

Published

on

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 7, 2024, குரோதி வருடம் ஆவணி 22, சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவியை ஆறுதலைத் தரும். இன்று குடும்பத்தில் அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலை தொடர்பாக மும்முரமாக செயல்படுவீர்கள். வாழ்க்கை துணையுடன் நேரத்தை ஒதுக்குவீர்கள். இன்று எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் கூடுதல் கவனத்துடன் ஆலோசித்து எடுக்கவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அவர்கள் போட்டியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். தொழில் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல் இருக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். குடும்பத்தில் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும். பணியிடத்தில் பிறருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு கடினமான வேலையிலும் வெற்றி பெற முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. பிறரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். உங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று பிறருக்காக ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். தாயின் உடல்நிலையில் கவனமாக இருக்கவும். இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். மாமியார் மூலம் மரியாதை, பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு வாதத்திலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. ஏதேனும் ஒரு வகையில் பண வருவாய் உண்டாகும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களுடன் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பழைய கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். இன்று உங்களின் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக செலவுகள் ஏற்படும். காதல் தொடர்பான விஷயத்தில் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். பிறருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு தொழில் வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கான சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இன்று கடினமான உழைப்பு தேவைப்படும். வீட்டிற்கு தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறரிடம் சிக்கி உள்ள பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. ஒரு அணியாக சேர்ந்து செய்யும் வேலையில் நல்ல வெற்றி உண்டாகும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகும். குடும்ப வாழ்க்கையில் மனைவியின் முழு ஆதரவை பெற்று மகிழ்வீர்கள். நிறுவனத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, நிலம் உள்ளிட்ட சொத்து வாங்கும் திட்டமிட்டுள்ளவர்கள் அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுங்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உங்களின் நிதி நிலையில் வலுவாக இருக்கும். இன்று புதிய சவால்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்தவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ள தினம். அதன் காரணமாக எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனத்துடன் செய்யவும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. வீடு, மனை வாங்கும் விவகாரத்தில் கவனம் தேவை. ஆரோக்கியப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் ஏமாற்றம் ஏற்படும்.

Exit mobile version