ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 22 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் : 22 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22, 2024, குரோதி வருடம் ஆவணி 6, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருக்கக்கூடிய மனஸ்தாபம் தீரும். இன்று உங்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற வாய்ப்பு உள்ளது. உங்கள் தந்தைக்கு பரிசு வழங்க நினைப்பீர்கள். பெற்றோர்களுடன் யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நண்பர்களின் உதவியால் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் முடிவடையும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. இன்று கடன் வாங்க நினைப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும். படிப்பு தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி, சூழ்நிலை இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்பு தீரும். இன்று உங்களின் பேச்சு, கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அதிகமாக செலவாகும். இன்று உங்களின் இலக்கில் கவனம் தேவை. வருமானத்தை விட செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான கவலை உங்களை தொந்தரவு செய்யும். வியாபாரத்தில் சில திடீர் பண பலன்கள் கிடைக்கும். உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவில் விரிசல் காரணமாக கவலையுடன் இருப்பீர்கள். மாணவர்கள் பணப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். உங்களின் வியாபாரம் புதிய வேகம் எடுக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று காலையிலிருந்து நல்ல செய்திகள் கேட்பீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களின் நன்மதிப்பு பிறரால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் நிதானம் தேவை. மாலை வரை அதிக அளவில் நிறைந்ததாக இருக்கும். அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதம் ஏற்படலாம் கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். உங்களின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் குறையும். குடும்பத்தின் தேவைகள் நிறைவேற்றி மகிழ்வீர்கள். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உங்களின் முன்னேற்றத்தைக் கண்டு எதிரிகள் கூட பொறாமைப் படுவார்கள். பணியிடத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் நிறைந்ததாக இருக்கும். சகோதரர்களுடன் உறவில் எரிச்சல் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் பெரியவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்த விவாதங்கள் செய்வீர்கள். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சிறப்பான நாளாக இருக்கும். தொழில் தொடர்பாக கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது கிடைப்பதில் தாமதம் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். இன்று உங்களின் புகழ் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். இன்று விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை தொடர்பாக கடினமான நேரத்தில் அனுபவமுள்ள நபர் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் சில ஏமாற்றம் ஏற்படும். இன்று எதிலும் உற்சாகமாக செயல்பட வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடைகிறார்கள். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் சிறப்பான பலனை தரும். உங்களுக்கு நிதி நன்மைகள் அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் எதிரிகளை சமாளிக்க வேண்டிய நாள். உங்களின் முயற்சிகள் மூலம் திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டிய நாள். சொத்து தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தந்தையின் ஆலோசனை மகிழ்ச்சியை தரும். இன்று பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.