ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 17.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 17.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 17, 2024, குரோதி வருடம் ஆடி 1, புதன் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பல நாட்களாக ஆசைப்பட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்களை எதிரிகள் தொல்லை இருக்கும். மாணவர்கள் புதிய படிப்பில் சேர்வது தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். குடும்பத் தொல்லையில் தந்தையின் ஆலோசனை மகிழ்ச்சியை தரும். இன்று வீண் செலவுகள், கவனக்குறைகளை தவிர்க்க வேண்டிய நாள். இல்லை இன்று பெரிய சிக்கல்கள் ஏற்படும். பெரிய பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது அவசியம். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பதட்டமான சூழ்நிலை இருக்கும். உங்களின் வேலை, வியாபாரம் போன்ற விஷயத்தில் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். காதல் வாழ்க்கை வலுவாக இருக்கும். இன்று கட்டுப்பாடற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல், சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். வணிகத்தில் தொடர்புடையவர்கள் பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டும். உங்களின் வரவு, செலவுகள் கவனம். இன்று முதலீடு செய்வதே தவிர்ப்பது நல்லது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வெற்றிக்காக கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்கள் எதிரிகளின் சதியை உடைப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சில புதிய திட்டங்கள் வகுத்து செயல்படுவீர்கள். இது உங்களின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக அமையும். அனுபவஸ்தர்களின் ஆலோசனையால் உங்களின் பணிகள் சிறப்பாக முடிவடையும். இன்று வியாபாரத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த சாதகமான நாளாக அமையும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் முன்னேற்றம் குறித்து யோசிப்பீர்கள். உங்கள் வேலையில் சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று நீதிமன்ற வழக்கு தொடர்பான விஷயங்கள் முடிவடையும். மூத்த நபர்களின் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களின் படிப்பில் கவனம் தேவை. இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் எச்சரிக்கை தேவை.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரின் ஆலோசனைகள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வியாபாரிகள் பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முதலீடு செய்வீர்கள். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக புதிய திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இன்று புதிய திட்டங்கள், வேலையை தொடங்குவதற்கு சாதகமான நாளாக இருக்காது. இன்றுமாணவர்கள் படிப்பில் வெற்றி பெற கடினமாக உழைப்பு தேவைப்படும். மாமியார் பக்கத்திலிருந்து மரியாதை அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலையில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். இன்று குடும்பத்தில் அனைத்து தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். தந்தையின் உடல்நிலை சற்று மோசமடையும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் மன அழுத்தத்தை ஏற்படும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று அனுபவமிக்கவரின் வழிகாட்டுதல் நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். வணிக பயணங்கள் சிறப்பான பலனை தரும். இன்று உங்களின் நிதிநிலை மேம்படும். இன்று எதிலாவது முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான நாள். வாழ்க்கை துணையின் ஆலோசனை வெற்றியை தரும்.

Exit mobile version