LOADING...

ஆடி 7, 2024

​இன்றைய ராசி பலன் 7.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 7.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டிய நாள். அதன் மூலம் நீங்கள் நினைத்த வேலையை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் சிறப்பான செயல்களால் எதிரிகள் தோற்று போவார்கள். குழந்தைகளின் தொடர்பான சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கிற்கு. புதிய வேலையை தொடங்க சரியான நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் தடைப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்ப விஷயங்கள் குறித்து கவலை ஏற்படும். இல்லற வாழ்க்கையில் மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் நிதி நிலை சந்தோஷத்தில் கவனம் தேவை. என்ற தேவையற்றவனின் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக செயல்படவும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் தொல்லை தரக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் பேசித் தீர்ப்பது நல்லது. இன்று சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நல்ல ஆதரவு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும், ஓய்வும் கிடைக்கக்கூடிய நாள். ஒரு சிலரின் ஆலோசனை, அனுபவத்தால் தடைப்பட்ட சில வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கை வலுவாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அனுபவம் மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையில் உங்களின் முக்கிய வேலைகளை முடித்து வளர்ச்சி காண்பீர்கள். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களுடைய நிதி நிலை பலப்படும். நீண்ட காலமாக விரும்பிய சில விஷயங்கள் நடக்கும். நிதிநிலை விஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க சாதகமான நாள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாக்கும். உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் பிறரின் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இருக்கும். உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும். வியாபாரத்தில் விவேகமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு மரியாதை மற்றும் செல்வாக்கு பெறுவீர்கள். பல நாட்களாக எழுபதில் இருந்த பிரச்சனைகள் தீரும். இன்று உங்களுக்கு கண், வயிறு தொடர்பான பிரச்சனைகளை இதற்கு உள்ள நேரிடும். இன்று முக்கிய வேலைகள் தடைப்படலாம். இன்று நேரத்தை வீணடிக்காமல் செயல்படுவது அவசியம். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடு திட்டங்களில் ஈடுபட நினைப்பீர்கள். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் தீரும். அக்கம் பக்கத்தினருடன் எந்த வித பிரச்சனை, சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். இன்று உற்றார், உறவினர்களே ஒற்றுமை நிலவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சூழ்நிலை இனிமையானதாக இருக்கும். மேலதிகாரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று பணம் அதிகமாக செலவிட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். வியாபாரம் தொடர்பாக பணம் பற்றாக்குறை சந்திக்க நேரிடும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அதிக வேலை காரணமாக மும்முரமாகச் செயல்படுவீர்கள். காதல் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் விடாமல் முயற்சி, பொறுமை, கடின உழைப்பால் உங்களின் இலக்குகளை அடைய முடியும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. உணவில் கவனம் செலுத்தவும். இன்று அஜீரணம் மற்றும் வாயு தொல்லை தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாள். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வணிக வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் நாள். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இந்த திட்டமிட்ட செயல்களில் சிறப்பான வெற்றியை பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

Prev Post

இலங்கைக்கான விமான சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டார் ஏர்வேஸ்

Next Post

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

post-bars