Connect with us

ஜோதிடம்

12 ஆண்டுகு பிறகு உருவாகும் குரு மங்கள யோகம் : அதிர்ஷ்ட மழை பெறும் 5 ராசிகள்

Published

on

Rasi Palan new cmp 14 scaled

12 ஆண்டுகு பிறகு உருவாகும் குரு மங்கள யோகம் : அதிர்ஷ்ட மழை பெறும் 5 ராசிகள்

ரிஷப ராசியில் குரு பகவான் மற்றும் செவ்வாய் சேர்க்கை ஜூலை 12ம் தேதி முதல் நடக்க உள்ளது. இதனால் உருவாகக்கூடிய குரு மங்கள யோகத்தால் 5 ராசியை சேர்ந்தவர்களுக்கு பல விதத்தில் மேஷம், தனுசு உள்ளிட்ட 5 ராசிகளுக்கு தொழில், செல்வ வளர்ச்சி ஏற்படும்.

ரிஷப ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவானுடன், 12 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் பகவான் சேர உள்ளார். ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி செவ்வாய் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலம் வரை, இந்த குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவையும், செயலில் தைரியம், சரியான முடிவுகளை எடுக்கவும் முடியும்.

மேஷ ராசி
மேஷ ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது உங்கள் வாழ்க்கையில் பல விதத்தில் சுப பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். தங்களின் இலக்குகளை அடைய முடியும். பிறரிடம் சிக்கியுள்ள பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும். பணியிடத்தில் திறமையை நிரூபிக்க முடியும். தொழிலதிபர்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறலாம். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி ராசி
செவ்வாய், குருவின் சேர்க்கையால் உங்களின் வருமானம் உயரும். சுக போகங்கள் ஏற்படும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்குச் சாதக சூழல் நிலவும். நீங்கள் சரியான ஆலோசனையுடன் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. வணிகத்தில் தொடர்புடையவர்கள் சிறப்பான லாபத்தை எதிர்பார்க்கலாம்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நாதன் செவ்வாய் பகவான், குருவுடன் சப்தம ஸ்தானத்தில் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக உங்களின் குடும்ப ஒற்றுமையும், பரஸ்பர ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
குடும்பத்துச் சுற்றுலா, விஷேசம் தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் துணையுடன் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். உடல் ரீதியாக, மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.

தனுசு ராசி
தனுசு ராசி அதிபதியான வியாழன் மற்றும் செவ்வாய் பகவானின் சேர்க்கையானது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும். உங்கள் முயற்சிகள் முழுமையாக வெற்றியடையும். அரசாங்க திட்டத்தின் மூலம் நன்மைகள் பெறுவீர்கள்.
இல்லற வாழ்க்கையில் சுகபோகங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொண்டு வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும்.

மீன ராசி
மீன ராசிநாதன் குரு மற்றும் செவ்வாய் இணைவதால் உங்களின் செயல்கள் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையை நிரூபிக்க முடியும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் பெறலாம். பெற்றோருடனான உறவு மேம்படும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தச் சாதக சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேகம் ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...