ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூன் 22, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று ரிஷப ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஜூன் 22, 2024, குரோதி வருடம் ஆனி 8, சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகள் கேட்கலாம். இதனால் மனக்கவலை ஏற்படும். இன்று உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் செயலில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வியாபாரம் தொடர்பாக பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக அதிகமாக கவலைப்படுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப தொழில் செய்யக்கூடியவர்களுக்குத் தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய யோசனைகளைப் பயன்படுத்தி முன்னேற்றத்திற்கான வழியை தேர்ந்தெடுவீர்கள்.

ஜூலை மாதத்தில் சுக்கிரனால் உருவாகும் இரட்டை பம்பர் ஆஃபர் – அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகள்

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகளை இன்று முடிக்க முடியும். குடும்பத்துடன் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். காதல் விஷயத்தில் கவனம் தேவை.
​மரண ரகசியம்: ராசிப்படி ஒருவர் எப்படி மரணம் அடைவார் தெரியுமா? திடமான மனம் கொண்டவர்கள் மட்டும் படிக்கவும்

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வணிகத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளின் விஷயத்தில் பொறுப்புணர்ந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுக்கு கௌரவம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை கழிப்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பேச்சில் இனிமை இருக்கும். அதன் மூலம் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையில் அலைச்சல் அதிகமாக இருக்கும். கண் தொடர்பான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகள் உங்களைத் தொந்தரவு செய்ய முயற்சி செய்வார்கள். இன்று நேர்மறையான சிந்தனையுடன் செயல்படவும். காதல் வாழ்க்கையில் பரிசுகள் கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ரத்தம் தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும். வணிகத்தில் உங்களின் தொடர்ச்சியான முயற்சிகளால் நல்ல வெற்றி பெற முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் விருந்து விழா நடக்க வாய்ப்பு உள்ளது. இன்று விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.. இன்று உங்களின் பணப்பிரயவர்த்தனைகளில் கவனம் தேவை. உங்களின் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. உறவில் இணக்கமான சூழல் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று பெரிய உடல் நல பாதிப்பு கவலையே அதிகரிக்கும். குடும்பத்தில் சமயங்களை பேணுவது அவசியம். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். இன்று உங்களுக்கு எதிரிகள் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். இருப்பினும் சூழலை சிறப்பாக சமாளிப்பீர்கள். உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்படவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பண வருவாய் சிறப்பாக இருக்கும். உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கவனமாக செயல்படவும். சமூகம் மற்றும் ஆன்மிக நிலையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பெண் நண்பர்களின் ஆதரவு வெற்றியை தரும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விதமான வாக்குவாதம், சச்சரவுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்களின் குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி அடைவார்கள். தொழில் தொடர்பான விஷயத்தில் லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். குடும்ப வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் கடினமான உழைப்பிற்கான நல்ல பலனடைவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சில சாதனை மற்ற செய்திகளை கேட்டு மன வருத்தம் ஏற்படும். இன்று பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் அலைச்சலும், மன கவலையும் அதிகரிக்கும். இன்று உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களின் நிதிநிலைமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் வேலை தொடர்பான கவலை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த தகராறுகள் தீர்ந்து, நெருக்கம் அதிகரிக்கும். இன்று ஆன்மீக பயணங்கள், சுப காரியங்களில் ஈடுபடுவது போன்ற விஷயத்தில் செலவுகள் ஏற்படும். இன்று உங்களின் விருப்பமான விஷயங்களை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு கிடைக்கும்.

Exit mobile version