ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 12.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 12.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூன் 12, 2024, குரோதி வருடம் வைகாசி 30, புதன் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் நிமித்தமான பயணங்கள் சில நேரிடலாம். பயணம் லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் செயல்பாடு புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும்.இன்று உங்கள் வாழ்க்கைத் துணை இடம் இருந்து மரியாதை, ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் சாதகமான முடிவுகள், உங்களின் நிதி நிலை மேம்படுத்தும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் துணை என் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் தோள் மீது பணிச் சுமை அதிகாரிக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புகள், வேலை. என்ற வியாபாரத்தில் பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உங்களின் திறமைகளை நிரூபிக்கும் நாளாக அமையும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று என்ற அரசியலில் உள்ளவர்களுக்கு சில தடைகளை சந்திக்க நேரிடும். இதனால் மனம் சற்று வருத்தமடையும். உடன் பிறந்தவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் மும்முரமான நாளில் உங்களின் வாழ்க்கைத் துணை அல்லது காதலுக்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம். வணிகஸ்தர்கள் நிதி நிலைமையை மேம்படுத்த முடியும். இன்று நீங்கள் கையில் இருக்கும் வேலையை பொறுப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு தொடர்பான நபர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய சூழல் இருக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். முதலீட்டாளர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அறிவுரை நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் சிறப்பான உதவியாக இருக்கும். குடும்பத்தில் இளையவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கடிதங்களின் கடின உழைப்புக்கு சாதாரணமான பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் உங்களின் வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பழைய கடன் மற்றும் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். சமூகப் பணிகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் வேலை தொடர்பான பயணங்கள் நல்ல வெற்றியை பெற்று தரும். இன்று உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நிதிநிலை முன்னேற்றம் காணும். பணியிடத்தில் கூடுதல் வேலையால் கடின உழைப்பு தேவைப்படும். இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை அடைவீர்கள். வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நேரத்தில் பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமான பலனை பெறுவீர்கள். இன்று திட்டமிட்ட வேலைகளில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் மனைவியின் ஆதரவு, ஒத்துழைப்பு நற்பலனை பெற்றுத்தரும். இந்த எதிர்காலம் தொடர்பான கடினமான முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. உங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் இனிமையான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். இன்று ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் நல்ல ஆதரவை பிரிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நலம் முன்னேற்றத்தைக் காண முடியும். இன்று எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து அனைத்து விதமான சவால்களையும் சிறப்பாக சமாளிக்க முடியும். வியாபாரிகள் நல்ல ஆதாயம் அடையக்கூடிய நாள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் தவறான குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். அதனால் கவனமாக செயல்படவும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. இன்று தேவையற்ற மன அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். வணிக வர்க்கத்தினர் கவனமாக சூழலை கையாளவும். உங்களின் செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கூடுதல் கவனம் தேவை. இன்று நேர்மறையான சிந்தனை உடன், ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாள். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபத்தை பெறலாம். உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்கள் பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் கடின உழைப்பு தேவை. திருமண வாழ்க்கையில் இருந்த தகராறுகள், மனஸ்தாபங்கள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகளிடம் இந்த சில நல்ல செய்திகளை பெற்று மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான ஆசிரியர்கள், சக மாணவர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும்.

Exit mobile version