ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 08.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

இன்றைய ராசி பலன் 08.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூன் 08, 2024, குரோதி வருடம் வைகாசி 26, சனிக் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். இன்று வியாபாரத்தில் மந்த நிலை காரணமாக பெற்ற கவலையுடன் இருப்பீர்கள். இருப்பினும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்கள் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்துடன் சுபன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சொத்து சம்பந்தமான தகராறுகள் சற்று மன வருத்தத்தைத் தரும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழ் பெறுவீர்கள். இன்று உங்களின் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் மூத்த நபர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பொது நலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சம்பந்தமான எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் சரியான ஆலோசனைக்கு பின்னர் எடுக்கவும். என்ற பயணங்கள் செல்ல நேரிடும். பயணங்களில் மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு தைரியம், வீரம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பயணம் செல்கிறீர்கள். இன்று எந்த விஷயத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். பணியிடத்தில் தகுதிக்கேற்ப வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். அரசு பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். வேலையில் பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். இன்று நிதிநிலை சிறப்பாகவும், கடனை திரும்ப செலுத்த வாய்ப்பு உள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சில சிறப்பான சாதனைகளை படைப்பீர்கள். எந்த ஒரு புதிய வேலையை தொடங்குவதற்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உற்சவ பக்தர்கள் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். திடீர் நிதி ஆதாயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொண்டு பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். என்ற நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சேமிப்பதில் அக்கறை கொள்ளவும். தொழில் அதிபர்கள் எச்சரிக்கையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலையில் உள்ள தடைகளை சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள். குழந்தைகள் விஷயத்தில் பொறுப்புடன் செயல்படவும். உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய நாள். வேலையில் உள்ள மன அழுத்தம் குறையும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய விவாதங்களில் பங்கேற்கும் நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று வீடு புதுப்பித்தல் தொடர்பான வேலைகளில் கவனத்துடன் செயல்படவும். சிலருக்கு வெளிநாடு, வெளியூரில் வேலை கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் சில தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பெற்றோருடன் அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். சிலருடன் சேர்ந்து கூட்டாக சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் சிறப்பான வெற்றியைத் தரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று பெரிய ஒப்பந்தம் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் உயர்கல்விக்கான நல்ல பாதையை அடைவீர்கள். என்ற வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளின் படிப்பு தொடர்பான விஷயத்தில் இருந்த மன குழப்பம் தீரும்..

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் ஆரம்பம் சற்று பலவீனமானதாக இருக்கும். வேலை தொடர்பாக திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். பிறர் வழங்கக்கூடிய அறிவுரைகளை சிந்தித்து ஏற்றுக் கொள்ளவும். இன்று உங்களின் உணவு மற்றும் உடல் நலனில் அக்கறை தேவை. முக்கிய விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. நிதிநிலை தொடர்பான சிரமத்தில் இருந்து வெளிவருவீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். வணிகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெறலாம். திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்ததாக இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளை நிதானமாக பேசி தீர்க்கவும். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வீடு, மனை, வாகனம் வாங்கும் உங்களின் முயற்சிகள் நிறைவேறும். மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணம் சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று நீங்கள் யாரிடமும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அரசியலில் உள்ளவர்களுக்குப் பெரிய பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று அவசரமாக எந்த ஒரு முடிவை எடுப்பதும், வேலையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இன்று நீங்கள் முன்னெடுக்கும் வேலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். உங்களின் புத்திசாலித்தனத்தால் எதிரிகளை சிறப்பாகக் கையாளுவீர்கள். பெற்றோர் வழியிலிருந்து நிதி நன்மைகளை பெறுவீர்கள். இன்று அனைவரையும் மதித்து நடப்பது அவசியம்.

 

Exit mobile version