ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 23.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 23.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 23, 2024, குரோதி வருடம் வைகாசி 10, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். சமூக நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். காதல் விஷயத்தில் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். என்று உங்களின் தன்னம்பிக்கையால் வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லை தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சில பிரச்சனைகள் சமாளிக்க வேண்டியது இருக்கும். எந்த விஷயத்திலும் கூடுதல் உழைப்பு தேவைப்படும். வேலைகளை முடிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். என்று குடும்பத்திலும், பணியிடத்திலும் பொறுமையும், சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியம். வேலை விஷயத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனை பெறுவது நல்லது.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் பெரிய வெற்றிகளை பெறலாம். நல்ல லாபம் கிடைக்கும் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் நீண்ட நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும். உங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய நாள். வேலை விஷயத்தில் பொறுமையாக செயல்படவும். இன்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவும் அவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உணர்ச்சிகளையும், கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள். உங்கள் வேலையில் செய்யக்கூடிய தவறுகள் பிரச்சனையை தரக்கூடியதாக இருக்கும் என்பதால் கவனமாக செயல்படவும். இன்று புதிய நபர்களையும், புதிய அனுபவங்களையும் பெற வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்களின் செயல்பாடு திருப்தி தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.
​திருமண வாழ்க்கை சொர்க்கமாகனுமா? : இந்த 5 சிறந்த குணங்களை இருக்கும் பெண்ணை திருமணம் செய்யுங்கள் -சாணக்ய நீதி

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். உங்கள் பிரச்சனைகளை சமாளிக்க கடின உழைப்பு தேவைப்படும். உங்களை இலக்குகளை அடைவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் பொறுமையும், கடின உழைப்பும் பொன்னான வாய்ப்பை பெற்று தரும். இன்று பணி அதிகமாக இருந்தாலும் உங்களின் குடும்பத்தை கவனித்துக் கொள்வது அவசியம். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத சில அற்புத நிகழ்வுகள் நடக்கும். உங்களை சுற்றியுள்ள விஷயத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்பட்டு எந்த ஒரு வேலையும் செய்து முடிக்கும் சாதகமான சூழ்நிலை இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய திட்டங்களும், வாய்ப்புகளும் கிடைக்கும். வெற்றி தேடி வரக்கூடிய நாள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பின் பயனை அடைவீர்கள். இன்று உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்களிடமிருந்து விலகி இருக்கவும். இன்று உங்களின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்து செயல்படவும். இன்று பணம் பற்றாக்குறையும், மனக்கவலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.,

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை மிகவும் கவனமாக செய்வது அவசியம். திடீர் பிரச்சினைகளால் வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். மேலும் இது உடல், மன நலத்தை குறைக்கும். அரசு வேலைக்கு தயாராகவும் கூடிய நபர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இன்று உங்களுக்கு வருமானம் சிறப்பாக இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். எந்த ஒரு வேலையிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்படவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும். செயல்களில் சற்று கவனம் தேவை. பெரிய முதலீடுகளில் மூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் அதிகாரம் அதிகரிக்கும். பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு காதல் மலர வாய்ப்புள்ளது. எந்த ஒரு செயலிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். வேலையில் பெரிய வெற்றிகளை பெறலாம். உங்களின் கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வியாபாரம், தொழிலுக்கு மிகவும் சாதகமான நாள். வேலையில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். சரியாக திட்டம் விடலாம், நேரத்தை பராமரிப்பது அவசியம். என்று உங்களின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். பல நன்மைகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணமழை பொழியும். உங்கள் உறவினர்களுடன் இருக்கும் மனதாங்கள் தீர்க்க சாதகமான நாள். உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவதும், இனிமையை கடைப்பிடிப்பதும் அவசியம். பணியிடத்தில், அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு பண பற்றாக்குறை இருக்காது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். அன்றாட வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று விடாமுயற்சியையும், சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களின் வாழ்க்கை துணைவி தான் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. என்று புத்திசாலித்தனத்துடன் செயல்பட எல்லா வேலைகளும் சிறப்பாக முடியும்.

Exit mobile version